காலத்திற்க்கு ஏற்றார் போல் வியாபாரத்தை மாற்றும் ஆப்பிள் நிறுவனம்

Loading...

%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8bகாலத்திற்க்கு ஏற்றார் போல் வியாபாரத்தை மாற்றி கொண்டே இருக்க வேண்டும் என்பதை யார் பின்பற்றுகின்றார்களோ இல்லை தெரிய வில்லை, ஆனால் ஆப்பிள் நிறுவனம் இதை அப்படியே பின்பற்றுவதாகவே தெரிகின்றது. இங்கு ஆப்பிள் நிறுவனம் இதுவரை வாங்கி இருக்கும் சில நிறுவனங்களை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம்…

1.சிரி இன்க்

அப்ளிகேஷன்களை உருவாக்கும் இந்த நிறுவனம் 2007 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது, இதனை ஆப்பிள் நிறுவனம் 2010 ஆம் ஆண்டு வாங்கியது. அதன் பின் ஆப்பிள் நிறுவனம் 2011 ஆம் ஆண்டு ஐபோன் 4எஸ் கருவியில் வாய்ஸ் அசிஸ்டென்ட் சேவையான சிரியை அறிமுகம் செய்தது.

2. ஈமேஜிக்

ஜெர்மனியை சேர்ந்த இசை தயாரிப்பு சார்ந்த மென்பொருள் நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனம் 2002 ஆம் ஆண்டு வாங்கியது, பின் அந்நிறுவனத்தின் லாஜிக் மியூசிக் ஆப்பிள் லோஜிக் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகின்றது.

3. நத்திங் ரியல்

2002 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் ஆப்பிள் நிறுவனம் அதி நவீன டிஜிட்டல் எஃபெக்ட்ஸ் மென்பொருளை வாங்கியது, இருந்தும் இந்த தொழில்நுட்பம் 2009 ஆம் ஆண்டு கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

4. பவர் கம்ப்யூட்டிங்

1997 ஆம் ஆண்டு ஆப்பிள் ஸ்டாக் சார்பில் சுமார் 100 மில்லியன் டாலர்களுக்கு இந்த நிறுவனம் வாங்கப்பட்டது.

5. நெக்ஸ்ட்

1985 ஆம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் துவங்கிய நெக்ஸ் கம்ப்யூட்டர் நிறுவனம் சரியான லாபம் அடையாத காரணத்தினால் இதனை ஆப்பிள் நிறுவனம் 1996 ஆம் ஆண்டு சுமார் 429 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியது.

6. ப்ராக்ஸிமிட்டி

அனிமேஷன் சார்ந்த பணிகளை மேற்கொள்ள ஏதுவாக விளங்கும் மென்பொருள்களை தயாரிக்கும் ப்ராக்ஸிமிட்டி நிறுவனத்தை ஆப்பிள் 2006 ஆம் ஆண்டு வாங்கியது.

7. பி.ஏ செமி

சிப் மற்றும் மைக்ரோ பிராசஸர்களை தயாரிக்கும் பி.ஏ செமி நிறுவனத்தை ஆப்பிள் 2008 ஆம் ஆண்டு வாங்கியது.

8. லாலா

ஆன்லைன் மியூசிக் ஸ்ட்ரீமிங் நிறுவனமான லாலா வியாபாரத்தை ஆப்பிள் நிறுவனம் 2009 ஆம் ஆண்டு 80 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியது. ஆனால் இந்த சேவை கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது

9. குவாட்ரோ

வயர்லெஸ் மொபைல் விளம்பர நிறுவனமான குவாட்ரோவினை ஆப்பிள் 2010 ஆம் ஆண்டு வாங்கியது.

10.இன்ட்ரின்சிட்டி

2010 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் இன்ட்ரின்சிட்டி எனும் மொபைல் சிப் தயாரிக்கும் நிறுவனத்தை வாங்கியது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply