காருக்குள் தூய்மையான காற்றோட்டத்துக்கு கென்ட் அறிமுகப்படுத்தும் புதிய சாதனம்

Loading...

%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%82%e0%ae%af%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1ஒவ்வொரு துளியும் பரிசுத்தம்… என ஹேமாமாலினியே உத்தரவாதம் அளித்ததால், கென்ட் ஆர்ஓ நிறுவனத்தின் குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்கள் இன்று பல வீடுகளின் சமையலறைகளில் இடம்பிடித்துள்ளன. ரிவர்ஸ் ஆஸ்மோஸிஸ் எனப்படும் ஆர்ஓ தொழில்நுட்பத்தின் வாயிலாக தண்ணீரை சுத்திகரிக்கும் சாதனங்களின் விற்பனையில் முன்னணியில் இருப்பது கென்ட் ஆர்ஓ நிறுவனத்தின் தயாரிப்புகளே. தனது வர்த்தக எல்லையை தண்ணீரோடு சுருக்கிக் கொள்ளாமல், பஞ்ச பூதங்களில் மூன்றாவதான காற்றை சுத்தப்படுத்தக் களமிறங்கிவிட்டது அந்நிறுவனம். மாசடைந்த காற்றை சுத்திகரித்து தூய்மையாக்கிக் கொடுப்பதற்கான சாதனங்களை வீட்டுப் பயன்பாட்டுக்காக கென்ட் ஆர்ஓ நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்தியது. வீடுகளுக்கான ஏர் ப்யூரிஃபையரான அவை மார்க்கெட்டுக்கு வந்த சில நாள்களிலேயே கவனம் ஈர்த்த பொருளாக மாறியது. இந்த நிலையில், அடுத்தகட்ட முயற்சியாக கார்களுக்குள் உலவும் கெட்ட வாடை, தூசு, புகை மற்றும் வைரஸ்களை அழிப்பதற்கான காற்று சுத்திகரிப்பு சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது கென்ட் ஆர்ஓ நிறுவனம். மார்க்கெட்டில் அதன் விலை ரூ.7,999 – ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே கார்களுக்குள் என்னதான் வாசனை திரவியங்களைப் பயன்படுத்தினாலும், அதையும் மீறி சில நேரங்களில் கெட்ட வாடை வரும். அதற்கு காரணம் காற்றில் பரவியுள்ள மாசுதான். அதை முழுமையாக நீக்க இந்த கென்ட் ஆர்ஓ சுத்திகரிப்பானால் முடியும் என உத்தரவாதம் அளித்துள்ளனர் அந்நிறுவனத்தின் அதிகாரிகள். அதுமட்டுமன்றி வைரஸ், தூசு, புகை உள்ளிட்டவற்றையும் இந்த சாதனம் சுத்திகரித்து சுத்தமான காற்றோட்டத்தை காருக்குள் வைத்திருக்க உதவுமாம். அனைத்துவிதமான கார்களிலும் இதைப் பொருத்திக் கொள்ளலாம். காம்பேக்டாக இருப்பதால் இடத்தை அடைக்காது என நம்பலாம். கென்ட் மேஜிக் கார் ப்யூரிஃபையர் என அதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அந்நிறுவனத்தின் தலைவர் மகேஷ் குப்தா, ஆரோக்கியம் மற்றும் தூய்மையான காற்றோட்டத்தைக் கொண்ட சூழலை உருவாக்குவதற்கான சாதனத்தை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். நம்மில் பெரும்பாலானோர் நாளொன்றுக்கு சராசரியாக 5 மணி நேரத்துக்கும் குறையாமல் காரில் பயணிக்கின்றனர். அவர்களுக்கு சுகாதாரமான காற்று அவசியம். அதைக் கருத்தில்கொண்டே இந்த சாதனத்தை தயாரித்துள்ளோம் என்றார். காற்றைத் தூய்மையாக்க வேண்டும் என்பது அவசியம்தான். அதேவேளையில், காசு கொடுத்து அதைச் செய்ய வேண்டுமா? என்பதுதான் பெரும்பாலானோரின் தயக்கம். மார்க்கெட்டுக்கு வந்திருக்கும் கென்ட் மேஜிக் ஏர் ப்யூரிஃபையர் எந்த அளவுக்கு ஹிட்டடிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply