காய்ச்சல் தடுப்புமருந்தினை காலை நேரத்தில் எடுப்பது நல்லது

Loading...

%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4சளிக் காய்ச்சல் தடுப்புமருந்துகளை மாலை நேரத்தை விட, காலையிலேயே கொடுத்துவிடுவது நல்ல பலனைத் தரும் என்று பிரிட்டனில் நடந்துள்ள ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

முற்பகல் 11 மணிக்கு முன்னதாக தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டவர்களின் உடலில் காணப்பட்ட நோய் எதிர்ப்புப் பொருட்கள் மிகவும் வீரியமானவையாக இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உடலின் இயல்பான போக்கை அவதானித்து நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிப்பது, நோய்த்தடுப்பு உபாயங்களை மேம்படுத்தவும் உயிர்களை காக்கவும் வழிசெய்யும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

பர்மிங்காம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்த விஞ்ஞானிகள் 65 வயதுக்கு மேற்பட்ட கிட்டத்தட்ட 300 பேரிடம் இந்த ஆய்வினை நடத்தியுள்ளனர்.

ஃபுளு எனப்படுகின்ற ஒருவகை சளிக் காய்ச்சல், வயது முதிர்ந்தவர்களை கடுமையாக நோய்வாய்ப்பட வைப்பதுடன் உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகின்றது.

Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply