கர்ப்பமாக இருக்கும் போது ஹீல்ஸ் அணியலாமா

Loading...

%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81இன்றைய காலத்தில் நிறைய பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது கூட ஹீல்ஸ் அணிகின்றனர். ஆனால் அப்படி கர்ப்பமாக இருக்கும் போது ஹீல்ஸ் அணிவது சரியா அல்லது தவறா என்று தெரியுமா? இருப்பினும் மிகவும் பிரபலமான இங்கிலந்து இளவரசியான கேட் மிடில்டன் மற்றும் கிம் கர்தஷியன் கர்ப்ப காலத்தில் ஹை ஹீல்ஸ் அணிந்து விழாக்களில் கலந்து கொண்டனர்.

நிபுணர்களின் கருத்துப்படி, இப்படி கர்ப்ப காலத்தில் ஹீல்ஸ் அணியக்கூடாது என்று எந்த ஒரு ஆய்வும் சொல்லவில்லை. இருப்பினும் பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது ஹீல்ஸ் அணிந்தால், அவர்களுக்கு அசௌகரியமாக இருக்கும் என்றும், குறிப்பாக ஆரம்ப காலத்தை விட, இரண்டாம் மற்றும் மூன்றாம் பருவத்தில் தான் இந்த அசௌகரியத்தை அதிகம் உணர்வார்கள் என்றும் கூறுகின்றனர்.

ஏனெனில் இரண்டாம் பருவத்தில், கர்ப்பிணிகளில் உடலில் ரிலாக்ஸின் என்னும் ஹார்மோனின் உற்பத்தி அதிகரிக்கும். பொதுவாக இந்த ஹார்மோன்களானது தசைநார்களை தளர்வடையச் செய்து, குழந்தையை எளிதாக இடுப்பு வழியாக செல்ல உதவும். ஆகவே இக்காலத்தில் ஹீல்ஸ் அணியும் போது, கர்ப்பிணிகள் கடுமையான இடுப்பு வலிக்கு ஆளாகின்றனர்.

இங்கு ஹை ஹீல்ஸ் அணியும் போது, கர்ப்பிணிகள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போம். கர்ப்பமாக இருக்கும் போது ஹீல்ஸ் அணிந்தால், கணுக்கால்களில் உள்ள தசைகளானது இறுக்கமடைய ஆரம்பித்து, பின் கடுமையான கால் வலியுடன் கூடிய பிடிப்புக்களை சந்திக்கக்கூடும்.

மற்றொரு பிரச்சனை என்னவென்றால், கர்ப்பமாக இருக்கும் போது குழந்தை வளர வளர வயிற்றின் சுமை அதிகரிக்கும் போது இடுப்பு எழும்பானது மேல் நோக்கி தள்ளப்படும். இந்நேரத்தில் அதிகப்படியாக ஹீல்ஸ் அணியும் போது, பிரசவத்திற்கு பின் பின்னழகானது அசிங்கமாகிவிடும்.

கர்ப்பிணிகளின் உடல் வடிவத்தையும் பாதிக்கும். எப்படியெனில், வயிறானது முன்புறம் இழுக்கும் போது, அதனை தாங்க வேண்டுமானால் நேராக இருந்தால் தான் முடியும். ஆனால்செய்தி.காம் ஹீல்ஸ் அணியும் போது, மேலும் குனிய வேண்டியிருப்பதால், கடுமையான முதுகு வலி மற்றும் நடக்கும் போது பெரும் சிரமமாக இருப்பதுடன், இதுமாதிரி நீண்ட நாட்கள் இருந்தால், இது உடல் வடிவமைத்தையே மாற்றிவிடும்.

இவையே கர்ப்பமாக இருக்கும் போது ஹீல்ஸ் அணிந்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள். இந்த பிரச்சனைகளை தவிர்க்க வேண்டுமானால், கர்ப்ப காலத்தில் ஹீல்ஸ் அணிவதை தவிர்ப்பதே நல்லது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply