கருச்சிதைவிற்கு பின் மீண்டும் கருத்தரித்துள்ளவர்களுக்கான ஆலோசனைகள்

Loading...

%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3பொதுவாக பெண்கள் கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர், உடல் அளவில் மட்டுமின்றி, மனதளவிலும் மிகவும் பலவீனமாகி இருப்பார்கள். அப்போது அவர்களுக்கு ஆறுதல் அதிகம் தேவைப்படும்.

அதுவும் குறிப்பாக இந்நேரத்தில் கணவன்மார்கள் தான் மிகவும் ஆறுதலாக இருக்க வேண்டும். இப்படி எதிர்பார்க்காத வகையில் கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர், மீண்டும் கருத்தரித்துவிட்டால், இக்காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஏற்கனவே கருச்சிதைவு ஏற்பட்டதால் மனமானது அதிக அழுத்தத்துடன் இருக்கும். இருப்பினும் அதனை மறந்து, மீண்டும் கருத்தரித்திருப்பதை நினைத்து சந்தோஷப்பட்டு, வயிற்றில் வளரும் குழந்தையை நல்லபடியாக பெற்றெடுக்க ஒருசிலவற்றை தவறாமல் செய்ய வேண்டும்.

* இரண்டாம் முறை கருத்தரிக்கும் போது, பெண்கள் சரியான டயட்டை பின்பற்ற வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் உடலானது மிகவும் பலவீனமாக இருப்பதால், பெண்கள் புரோட்டீன் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தவறாமல் டயட்டில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* ஏற்கனவே கருச்சிதைவு ஏற்பட்டிருப்பதால், மீண்டும் கருத்தரித்த பின் பெண்கள் மனதளவில் தைரியமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், மன அழுத்தத்திற்கு உட்பட்டு மீண்டும் கருச்சிதைவை சந்திக்கக்கூடும். குறிப்பாக இப்போது கணவன்மார்கள், மனைவிக்கு மிகுந்த ஆறுதலாக இருக்க வேண்டும்.

* மற்றொரு முக்கியமான குறிப்பு என்னவென்றால், காப்ஃபைன் உள்ள உணவுப்பொருட்களை அறவே தொடக்கூடாது. மேலும் எந்த ஒரு மருந்து மாத்திரைகளையும் தேவையில்லாமல் எடுத்துக் கொள்ளக்கூடாது.

* ஒருவேளை இக்காலத்தில் காய்ச்சல் வந்தால், அப்போது இயற்கை வைத்தியங்களைத் தவிர, வேறு எந்த ஒரு மருந்து மாத்திரைகளையும் தொடவேக்கூடாது.

* குறிப்பாக எந்த ஒரு பிரச்சினை என்றாலும் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும். பின் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எப்போதும் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறெல்லாம் நடந்து வந்தால், நிச்சயம் நல்ல அழகான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply