கனடா தம்பதியை ஏமாற்றிய பிரபல தொலைக்காட்சி சீரியல்

Loading...

‘பிரியமானவள்’. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களாக இருப்பவர்கள் இலங்கை போரின் போது அங்கிருந்து தப்பி தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த அண்ணன், தங்கை.

jjvc

இவர்கள் பல வருடங்கள் கழித்து ஒரு புகைப்படத்தால் இணைவார்கள். சமீபத்தில் ஒளிபரப்பட்ட இந்த எபிசோடில், அந்த இருவரின் பெற்றோர் என கூறி வீட்டில் ஒரு போட்டோவை தொங்கவிட்டிருப்பார்கள். அவர்கள் இறந்துவிட்டதாகவும் கூறுவார்கள்.

அந்த புகைப்படத்தால் தற்போது கனடாவில் வசித்துவரும் ஒரு தம்பதிக்கு பெரிய மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால் அந்த ஜோடியின் புகைப்படத்தை அவர்கள் அனுமதி இல்லாமல் பிரியமானவள் குழு பயன்படுத்தி, “அவர்கள் இறந்துவிட்டார்கள்” என்ற செய்தி பரவியதால் தான்.

கனடாவில் வாழ்கின்ற அந்த ஈழத் தமிழ்த் தம்பதியினர் இந்தப் புகைப்படத்தைப் பார்த்து திடுக்கிட்டுப் போனார்கள். அவர்கள் 40 ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த புகைப்படம் அது. அவர்களுக்கு தெரியாமலேயே அவர்களின் புகைப்படம் தொடர் நாடகத்தின் முக்கிய கட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அஜித்தின் வாலி படத்தில் சோனா என்ற பெயரில் ஜோதிகாவின் புகைப்படத்தை காட்டி ஏமாற்றுவதை போல இவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

நாடகத்தைப் பார்த்த அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் அவர்களை இனம் கண்டு கொண்டு, தொலைபேசியில் விசாரித்து வருகின்றார்கள். உயிரோடு இருக்கின்ற தம்மை, தம்மிடம் கேட்காமலேயே இறந்து போனவர்களின் படமாக நாடகத்தில் பயன்படுத்தியது பற்றி அவர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply