கண்ணீருடன் நடிகை சபர்ணா

Loading...

கண்ணீருடன் நடிகை சபர்ணா

தொலைக்காட்சி நடிகை சபர்ணா மதுரவாயிலில் உள்ள அவரது இல்லத்தில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%9a%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be

தற்கொலை செய்து கொண்ட நடிகை சபர்ணாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் சமீப நாட்களாக பதிவு செய்து வந்த எல்லாமே அவரது குழப்பமான மனநிலையையே காட்டுகின்றன.
அவர் நடித்து வந்த தொடர்கள் சிலவற்றில் இருந்து நீக்கப்பட்டது அவருக்கு மன உளைச்சலை கொடுத்தது என டி.வி. நடிகர்கள் சிலர் சொல்கிறார்கள்.
அவர் தனது காதலனுடன் வாழ்ந்து வந்ததாகவும், இருவர் இடையே நிலவிய பிரச்னைகளால் அவர் தனிமையிலே இருந்திருக்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன் விகடனுக்கு ஒரு பேட்டியளித்திருந்தார் சபர்ணா.
பேட்டி எடுக்கப்பட்ட போது அவர் ஒரு சீரியலுக்காக அழ வேண்டிய காட்சி. அதை நடித்துவிட்டு கலங்கிய கண்களுடன்தான் பேட்டிக்கு வந்தார். “இப்போதெல்லாம் சீரியலும் நிஜவாழ்க்கையும் வேறு வேறில்லை. சீரியல் போலவேதான் வாழ்க்கையும் இருக்கு” என பிலாசபி பேசியபடிதான் பேட்டிக்கு வந்து அமர்ந்தார்.
“எனக்கு பப்ஸ் சாப்பிடுறதுன்னா பிடிக்கும். சாயங்காலம் ஸ்கூல் விட்டு வரும் போது ஒரு கடையில் மட்டும் சூடா பப்ஸ் கிடைக்கும். படிச்சது மேட்டுப்பாளையம்ங்கிறதால பெரும்பாலும் சாயங்காலம் குளிர் இருக்கும்.
அந்த கடை பப்ஸ் வாங்கி கடிச்சுகிட்டே ப்ரெண்ட்ஸ்கூட பேசிகிட்டே வீட்டுக்கு போவோம். அதுதான் சார் இப்பவும் என் வாழ்க்கையில் சந்தோசமான காலம்” என ஃபீல் பண்ணி பேசினார்.
அதே போல் அந்த பேட்டி ஜாலியாக இருக்கவேண்டும் என அவரிடம் எப்படி கேள்விக்கேட்டாலும் அதில் எதோ ஒருவகையில் செண்டிமென்டாகத்தான் பதில் சொன்னார்.
காரணம் கேட்ட போது நடித்துக்கொண்டிருக்கும் காட்சியில் தன்னை காதலன் சந்தேகப்படும் சீன் எடுக்க்கப்பட்டதாகவும் அதில் ரொம்பவே ஃபீல் ஆகி நடித்ததால் ரிலாக்ஸ் ஆகமுடியவில்லை என தெரிவித்தார். அதன் பின்னர் அவர் அளித்த பேட்டி…
”ஹீரோக்கள் 60 வயசானாலும் ஹீரோவா நடிக்கிறாங்க… ஹீரோயின்கள் மட்டும் ஏன் சீரியலுக்கு வந்துடுறாங்க?”
”அவங்க என்னங்க பண்ணுவாங்க? இதுவரைக்கும் அந்த மாதிரி கல்யாணம் ஆன பொண்ணுங்களை நம்ம தமிழ் சினிமா ஏத்துக்கிட்டது இல்லை. அதனால ஹீரோயின்களும் அதுக்கான முயற்சியை எடுக்கிற எண்ணம் வரலை.”
“உங்கள் காதல் சாய்ஸ் எப்படி இருக்கும்?”
” ‘அகத்தின் அழகு முகத்துல தெரியும்’னு சொல்வாங்க. அதனால, அழகா இருக்கணும்னு அவசியம் இல்லை. கேரக்டர் நல்லா இருந்தாப் போதும். கல்யாணம் பண்ண பொண்ணை கண் கலங்காம வெச்சுப் பார்த்துக்கிறவன்தான் ஆம்பளை. என்னோட சாய்ஸ் அப்படி இருக்கும்.”
”நிறைய அனுபவமோ?”
” அய்யய்யோ… இதுவரைக்கும் எனக்கு வந்த மொத்த லவ் லெட்டர் ரெண்டோ, மூணோதான். முதல் லெட்டர் ஒன்பதாம் வகுப்பு படிச்சுக்கிட்டு இருந்தப்போ, பேக்கரி கடை வெச்சிருந்த அஜித்துங்கிற மலையாளிப் பையன் கொடுத்தது. லெட்டர்னு சொல்ல முடியாது… காதல் கவிதையை எழுதிவெச்ச கிரீட்டிங் கார்டு. அதை வாங்கிக்கிட்டு என்னோட ஃபிரெண்ட்ஸ்கிட்ட எல்லாம் ‘எனக்கும் ஒருத்தன் லவ் லெட்டர் கொடுத்திருக்கான்டி’னு பெருமைப்பட்டுக்கிட்டேன்.”
”இப்போ கிரீட்டிங்ஸ் கார்டுல காதல் கவிதை எழுதிக் கொடுத்தா?”
”நோ சான்ஸ்… ‘ஐ மேரி யூ…’னு அப்ரோச் பண்ணிட்டு, வீட்டுல வந்து பொண்ணு கேட்டுக் கல்யாணம் பண்ணிக்கணும். கல்யாணம் முடிஞ்சு ஆற அமர லவ் பண்ணிக்கலாம்.”
”முகத்துக்கு முன்னாடி விழற முடி மேல பொண்ணுங்களுக்கு அப்படியென்ன கிரேஸ்?”
”சில பேருக்கு அது ஸ்டைல், சில பேருக்கு அது ‘என்னைக் கவனிடா’ங்கிற சிக்னல். முக்கியமானது பசங்க பக்கத்துல நிக்கும்போது வர்ற படபடப்பைப் போக்கிக்கிறதுக்கு!”
நடிகைகள், குறிப்பாக தொலைக்காட்சி நடிகைகள் திடீர் என பிரபலாவதும், பின் அந்த வாழ்க்கை நழுவும் போது இப்படி முடிவு எடுப்பதும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. சின்னத்திரை நடிகர்கள் இந்த விஷயத்தை கவனமாக கையாண்டு, அவர்களது வாழ்க்கை தொலையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply