கடலுக்கடியில் எப்படி பீப் சத்தம்

Loading...

%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%80%e0%ae%aaஆர்டிக் கடலின் அடிப்பகுதியில் இருந்து வரும் பீப் சத்தத்தை கனடா இராணுவம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கனடாவின் நுனாவட் மக்கள், கடலுக்கடியில் ஹம் அல்லது பீப் சத்தம் வருவதாக அரசுக்கு புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து கனடா இராணுவத்தினர் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.
மர்மமாக ஒலிக்கும் அந்த சத்தத்தால் விலங்குகள் பயந்திருக்ககூடும் என கருதப்படுகிறது.
இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் Paul Quassa கூறுகையில், கோடை மற்றும் குளிர்காலங்களில் அதிகளவு வேட்டையாடப்படும் பகுதிகளில் ஒன்றாகும் என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இது சுரங்கம் தோண்டுவதால் ஏற்படுவதா அல்லது விலங்குகளை வேட்டையாடக்கூடாது என்பதற்காக எழுப்பப்படும் சத்தமா என பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன.

Loading...
Rates : 0
Loading...
VTST BN

Leave a Reply