ஒரே ஒரு டூத் பிரஷ் வச்சு எப்படியெல்லாம் உங்களை அழகு படுத்திக்கலாம்

Loading...

%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%9f%e0%af%82%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b7%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%8eசிறு துரும்பும் பல் குத்த உதவும். உங்களை அழகுப்படுத்திக் கொள்ள விலை உயர்ந்த பொருட்களைத்தான் தேடிச் சென்று வாங்க வேண்டுமென்பதில்லை. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல் நமக்கு டூத் பிரஷும் ஆயுதம். வெறும் டூத் பிரஷைக் கொண்டு என்னல்லாம் செய்ய முடியும் என கேட்கிறீர்களா? அதற்கு முதலில் இதை படிக்கவும்.


குழந்தைகளுக்கு சீவுவதற்கு:

பிறந்ததிலிருந்து 6 மாதம் வரை குழந்தைகளுக்கு மிக மென்மையான பஞ்சு போல் ஸ்கால்ப் இருக்கும். இந்த சமயத்தில் சீப்பைக் கொண்டு சீவ முடியாது. அதற்கு டூத் பிரஷ் உதவும். டூத் பிரஷினால் குழந்தைகளின் தலையை வாரும்போது ரத்த ஓட்டம் அதிகம் பாய்ந்து ஸ்கால்ப் ஊட்டம் பெறும். நன்றாக கூந்தல் வளரும்.


சுருட்டை முடிக்கு :

சுருள் முடி இருப்பாவ்ர்களுக்கு அடிக்கடி சிக்கு விழுந்துவிடும். மேலும் சீப்பைக் கொண்டு சீவும்போது தட்டையாக பந்து போல் காணப்படும். இது பார்ப்பதற்கு நன்றாக இருக்காது. இவர்கள் டூத் பிரஷினால் சீவும்போது எளிதில் சிக்கை அகற்றலாம். அதோடு கூந்தலும் புதுவித ஸ்டைல் பெற்று அழகாய் இருக்கும்.


கருமையான உதட்டிற்கு :

உதடுகளில் கருமை ஏற்பட்டுள்ளதா? சிறிது வாசலினை எடுத்துக் கொண்டு அதில் டூத் பிரஷினால் தடவு உதட்டில் மசாஜ் கொடுங்கள். இதனால் கருமை மறைந்து உதடு சிவப்பாகும்.


சருமத்திற்கு மசாஜ் செய்ய :

குழந்தைகள் உபயோகப்படுத்தும் டூத் பிரஷினால் தேங்காய் எண்ணையில் தேய்த்து உங்கள் முகத்தில் வட்ட வடிவில் மசாஜ் செய்து பாருங்கள். சருமத்தின் சிறு துளைகள் திறந்து கொண்டு புதிய செல்கள் உருவாக காரணமாகும். காற சருமத்தை பாதிக்காது. ரத்த ஓட்டம் அதிகப்படுத்தி சுருக்கங்களை போக்கிவிடும்.


மூக்கிலிருக்கும் கரும்புள்ளிகளை போக்க :

மூக்கின் ஓரங்களில் இருக்கும் கரும்புள்ளிகளை பிரஷ் கொண்டு நீங்கள் மறையச் செய்யலாம். தினமும் எலுமிச்சையில் சிறிது தேன் கலந்து அந்த கலவையை டூத் பிரஷினால் எடுத்து மூக்கில் கரும்புள்ளிகள் இருக்குமிடத்தில் தேய்க்கவும். சில நாட்களிலேயே காணாமல் போய்விடும்.


ஸ்க்ரப் :

உடலில் இருக்கும் அழுக்குகளை போக்கவும், இறந்த செல்களை அகற்றவும் ஸ்க்ரப்பாக டூத் பிரஷை உபயோகிக்கலாம். குளிக்கும்போது சோப் உபயோகித்தபின் டூத் பிரஷினால் தேய்த்தால் அழுக்குகள் எளிதில் வெளியேறி சருமம் சுத்தமாக இருக்கும்.குறிப்பாக எண்ணெய் சருமம் இருப்பவர்கள் உபயோகிக்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply