ஒரு கோடி ஸ்மார்ட்போன்களை 3 நாட்களில் விற்ற ஆப்பிள் நிறுவனம் புதிய சாதனை

Loading...

%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88கடந்த வெள்ளிக்கிழமை, ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட்போன் வரிசையில் சிக்ஸ் எஸ், சிக்ஸ் எஸ் பிளஸ் ஆகிய புதிய பதிப்புகளை வெளியிட்டது.
இவை ஆப்பிள் ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்து வந்த நிலையில், தற்போது சீனா உட்பட 9 நாடுகளில் மட்டுமே இந்த புதிய போன்கள் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், இவை வரும் அக்டோபர் 9-ம் திகதி இத்தாலி, மெக்ஸிகோ, ரஷ்யா, ஸ்பெயின் மற்றும் தைவான் நாடுகளில் வெளியாகிறது.
அத்துடன், இந்தியாவில் அக் 16-ம் திகதி முதல் விற்பனைக்கு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 130 நாடுகளில் இந்த ஸ்மார்ட்போன்களை வெளியிட ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், ஆப்பிள் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவில் ஒரே வாரத்தில் 1.3 கோடி ஸ்மார்ட்போன்களை விற்று புதிய சாதனை படைத்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply