ஏ6 மேட்ரிக்ஸ் 35 டிஎஃப்எஸ்ஐ சொகுசு காரின் பெட்ரோல் வேரியன்ட் இந்தியாவில் அறிமுகம்

Loading...

%e0%ae%8f6-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-35-%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%8e%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d%e0%ae%90தங்களின் ஏ6 மேட்ரிக்ஸ் 35 டிஎஃப்எஸ்ஐ சொகுசு காரின் பெட்ரோல் வேரியன்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளனர். ஜெர்மனியை சேர்ந்த ஆடி நிறுவனம், சொகுசு கார்களை தயாரித்து வழங்குவதில் புகழ்பெற்ற நிறுவனம் ஆகும். ஆடி ஏ6 மேட்ரிக்ஸ் 35 டிஎஃப்எஸ்ஐ சொகுசு கார் பற்றிய கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.
இஞ்ஜின்;
ஆடி ஏ6 மேட்ரிக்ஸ் 35 டிஎஃப்எஸ்ஐ சொகுசு கார், இனி மேட்ரிக்ஸ் ஹெட்லைட்கள் மற்றும் 35 டிஎஃப்எஸ்ஐ இஞ்ஜின் தேர்வுடன் கிடைக்கும். ஆடி ஏ6 மேட்ரிக்ஸ் 35 டிஎஃப்எஸ்ஐ சொகுசு காருக்கு, 190 பிஹெச்பியை வெளிப்படுத்தும் புதிய 1.8 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தபட்டுள்ளது.
கியர்பாக்ஸ்;
ஆடி ஏ6 மேட்ரிக்ஸ் 35 டிஎஃப்எஸ்ஐ சொகுசு காரின் இஞ்ஜின், 7-ஸ்பீட் எஸ்-டிரானிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
அறிமுகத்திற்கான காரணம்;
ஆடி ஏ6 மேட்ரிக்ஸ் 35 டிஎஃப்எஸ்ஐ சொகுசு காரின் பெட்ரோல் வேரியன்ட் அறிமுகத்திற்கான முக்கிய காரணமே, டீசல் இஞ்ஜின்கள் கொண்ட வாகனங்களுக்கு இந்திய வாகன சந்தைகளில் நிலவும் நிலையற்ற தன்மை தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் தடை / விலக்கம்;
டெல்லி அரசு டீசல் வாகனங்கள் மீது சமீபத்தில் தான் தடை விதித்திருந்தது. அந்த தடை சமீபத்தில் தான் விலக்கி கொள்ளப்பட்டது. எனினும், இந்த தடை திரும்பவும் அமல்படுத்தப்படுமோ என ஆட்டோமொபைல் நிறுவனம் பயப்படுகின்றன. இதனால், ஏறக்குறைய அனைத்து நிறுவனங்களும் தங்களின் கார் மாடல்களில் பெட்ரோல் இஞ்ஜின் கொண்ட வேரியன்ட்களை அறிமுகம் செய்து வருகின்றன.
சிறப்பு அம்சங்கள்;
ஆடி ஏ6 மேட்ரிக்ஸ் 35 டிஎஃப்எஸ்ஐ சொகுசு காரின் பெட்ரோல் வேரியன்ட்டில், புதிய 8-இஞ்ச் உள்ளிழுக்கக்கூடிய / மூடிக்கொள்ள / திறந்துகொள்ளும் வகையிலான மல்டிமீடியா டச்ஸ்கிரீன் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. மேலும், அடாப்டிவ் சஸ்பென்ஷன் உடைய 18-இஞ்ச் அளவிலான அல்லாய் வீல்கள் பொருத்தபட்டுள்ளது.
மோட்கள்;
ஆடி ஏ6 மேட்ரிக்ஸ் 35 டிஎஃப்எஸ்ஐ சொகுசு காரின் பெட்ரோல் வேரியன்ட், 5 விதமான டைனமிக் டிரைவிங் மோட்கள் உடைய டிரைவ் செலக்ட் வசதி கொண்டுள்ளது.
விலை;
ஆடி ஏ6 மேட்ரிக்ஸ் 35 டிஎஃப்எஸ்ஐ சொகுசு காரின் பெட்ரோல் வேரியன்ட், 52.75 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) அறிமுகம் செய்யப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply