ஏஎம்டி உடைய நிஸான் டெரானோ எஸ்யூவி, இந்தியாவில் விரைவில் அறிமுகம்

Loading...

%e0%ae%8f%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9நிஸான் நிறுவனம், தங்களின் நிஸான் டெரானோ எஸ்யூவியை ஏஎம்டி வசதியுடன் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஜப்பானை சேர்ந்த நிஸான் நிறுவனம், நிஸான் டெரானோ எஸ்யூவி உட்பட பல்வேறு மாடல்களை இந்திய வாகன சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர். ஏஎம்டி உடைய நிஸான் டெரானோ எஸ்யூவி தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.
ஏஎம்டி…
சமீப காலமாக, பல்வேறு கார் நிறுவனங்கள், தங்களின் கார் மாடல்களை ஏஎம்டி எனப்படும் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வழங்குகின்றனர். அந்த வகையில் நிஸான் நிறுவனமும் தங்களின் நிஸான் டெரானோ எஸ்யூவியை ஏஎம்டி வசதியுடன் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளனர். நிஸான் நிறுவனத்தின் கூட்டாளியான ரெனோ நிறுவனம், இந்த ஏஎம்டி வசதியினை தங்களின் டஸ்ட்டர் மாடலின் ஆர்எக்ஸ்எல் மற்றும் ஆர்எக்ஸ்இசட் ஆகிய வேரியன்ட்களில் அறிமுகம் செய்தனர்.
பிளாட்ஃபார்ம்;
நிஸான் டெரானோ எஸ்யூவியானது, ரெனோ டஸ்ட்டர் மாடல் உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்ம் தான் கொண்டுள்ளது. ரெனோ டஸ்ட்டர் மாடலில் உள்ள ஏஎம்டி தொழில்நுட்பத்தை அந்நிறுவனம் ஈஸி-ஆர் ஏஎம்டி என அழைக்கிறது. இது ஃபார்முலா ஒன் டீம் உதவியுடன் தான் உருவாக்கப்பட்டுள்ளது. இதே ஏஎம்டி வசதி தான், இந்த நிஸான் டெரானோ எஸ்யூவியில் காணப்படும்.
இஞ்ஜின் தேர்வுகள்;
நிஸான் டெரானோ எஸ்யூவியானது, பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் தேர்வுகளுடன் வெளியாகிறது.
பெட்ரோல் இஞ்ஜின்;
நிஸான் டெரானோ எஸ்யூவியின் 1.6 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின், 103 பிஹெச்பியையும், 145 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.
டீசல் இஞ்ஜின்;
நிஸான் டெரானோ எஸ்யூவியின் 1.5 லிட்டர் டீசல் இஞ்ஜின், 84 பிஹெச்பியையும், 109 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக உள்ளது.
ஏஎம்டி கிடைக்கும் மாடல்;
ஏஎம்டி வசதியானது, நிஸான் டெரானோ எஸ்யூவியின் 110 பிஹெச்பியை வெளிப்படுத்தும் மாடலில் கிடைக்கும்.
எக்ஸ்டீரியர் / இன்டீரியர்;
அப்ஹோல்ஸ்ட்ரியில் செய்யப்படும் சிறிய அளவிலான மாற்றங்களை தவிர நிஸான் டெரானோ எஸ்யூவியின் எக்ஸ்டீரியர் / இன்டீரியரில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் இருக்காது.
அம்சங்கள்;
அம்சங்கள் பொருத்த வரை, இந்த நிஸான் டெரானோ எஸ்யூவி, நேவிகேஷன் மற்றும் ஆட்டோ ஏசி உடைய டச்ஸ்கிரீன் மியூஸிக் சிஸ்டம் கொண்டிருக்கலாம்.
அறிமுகம்;
ஏஎம்டி உடைய இந்த நிஸான் டெரானோ எஸ்யூவி, வரும் பண்டிகை காலங்களின் போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.
விலை;
ஏஎம்டி உடைய இந்த நிஸான் டெரானோ எஸ்யூவியின் விலை, எம்டி எனப்படும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடைய டெரானோ எஸ்யூவி மாடல் விலையிலேயே கிடைக்கும். நிஸான் டெரானோ எஸ்யூவியின் எக்ஸ்வி டி 109 பிஹெச்பி வேரியன்ட், 13.15 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலைக்கு கிடைக்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply