எவ்வாறு சுவையான சிக்கன் பிரியாணி தயாரிப்பது

Loading...

%e0%ae%8e%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d
தேவையான பொருட்கள்:

1. கோழி இறைச்சி – 500 கிராம் (எழும்புகள் நீக்கப்பட்டது) 2. மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி 3. தயிர் – 1 கப் 4. கரம் மசாலா – 1 தேக்கரண்டி 5. மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி 6. உப்பு – தேவையான அளவு 7. இஞ்சி விழுது – 1 டீஸ்பூன் 8. பூண்டு விழுது – 1 ½ தேக்கரண்டி 9. நெய் – 3 தேக்கரண்டி 10. வறுத்த வெங்காயம் – 1 கப் 11. பாசுமதி அரிசி – 2 கப் (நீரில் ஊறவைத்தது) 12. மசாலா – தேவைக்கேற்ப 13. உலர் பழங்கள் – 1 கப் (நறுக்கியது) 14. குங்குமப்பூ தண்ணீர் – 2 டீஸ்பூன் 15. ரோஸ் – 1 டீஸ்பூன் 16. கீவ்ரா வாட்டர் – 1 டீஸ்பூன்


செயல்முறை:

1. ஒரு பெரிய கிண்ணத்தில் சிக்கன் துண்டுகளை எடுத்து அதனுடன் தயிர், மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி மற்றும் பூண்டு விழுது, உப்பு மற்றும் கரம் மசாலா தூள் போன்றவற்றைச் சேர்க்கவும். 2. அனைத்து மசாலாப் பொருட்களையும் நன்கு கலந்து அதில் சிக்கன் துண்டுகளை சுமார் 2 மணி நேரம்ஊற விட வேண்டும்.
3. ஒரு ஆழமான அடிப்பாகமுடைய கடாயில் நெய்யை ஊற்றி சூடாக்கவும். நெய் சூடானவுடன், அதில் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை போட்டு நன்றாக கிளறவும்.
4. அதனுடன் பொறித்த வெங்காயம் மற்றும் உலர் பழங்களைச் சேர்த்து, சிக்கன் துண்டுகள் அரை வேக்காடு வேகும் வரை வேக விடவும். சிக்கன் துண்டுகள் வெந்த பின்னர் அதை தனியே எடுத்து வைக்கவும்.
5. ஒரு கடாயை எடுத்து அதில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இப்போது, கொதிக்கும் தண்ணீரில் மசாலா பொருட்களைச் சேர்க்க வேண்டும்.
6. கொதிக்கும் தண்ணீரில் ஊற வைத்த பாசுமதி அரிசியைச் சேர்த்து அதை முக்கால் திட்டம் வரை வேக விடவும்.
7. இப்போது, ஒரு பெரிய பாத்திரத்தின் அடியில் கோழி துண்டுகளை வைத்து ஒரு அடுக்கை உருவாக்கவும். அதன் மீது வேக வைத்த அரிசியை பரப்பி மற்றொரு அடுக்கை உருவாக்கவும்.
8. அதன் மீது குங்குமப்பூ தண்ணீர், ரோஸ் வாட்டர், கீவ்ரா வாட்டர், உலர் பழங்கள், வறுத்த வெங்காயம், மற்றும் துண்டாக்கப்பட்ட கொத்தமல்லியை சேர்ர்க வேண்டும். அதன் பின்னர் அதை ஒரு அலுமினிய தாள் கொண்டு மூடவும்.
9. உங்களுக்கு பாரம்பரியமான பிரியாணி வேண்டும் எனில் பாத்திரத்தை அதனுடைய உண்மையான மூடி வைத்து மூடி, அதன் பின்னர் இடைவெளியை மாவை வைத்து அடைத்து விடுங்கள்.
10. இப்போது, மிகவும் குறைந்த தீயில் பிரியாணியை சுமார் 20 நிமிடங்கள் சமைக்க வேண்டும்.
11. பிரியாணி மணம் உங்களின் மூக்கை துளைக்கும் பொழுது அடுப்பை அணைத்து விடுங்கள். இப்பொழுது உங்களுடைய கோழி பிரியாணி பறிமாற தயாராக உள்ளது. நீங்கள் வார இறுதியில் குடும்பத்துடன் ஒரு பார்ட்டி கொண்டாடுவதாக இருந்தால் இந்த சிக்கன் பிரியாணியை தயார் செய்து உங்களின் விருந்தினர்களை ஆச்சரியப்படுத்துங்கள். அவர்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள்! அத்துடன் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இந்த அற்புதமான மற்றும் எளிமையான சிக்கன் பிரியாணி செய்முறை குறிப்புகளைப் பகிர்ந்து கொள்ள மறக்க வேண்டாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply