எளிதாக ஊகிக்கும் வார்த்தைகளை கடவுச் சொல்லாக ஏன் பாவிக்ககூடாது

Loading...

%e0%ae%8e%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95-%e0%ae%8a%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4இணையத்தில், ஒருவர் பல்வேறு தளங்களுக்கு பன்படுத்தும், ‘பாஸ்வேர்ட்’ எனப்படும், கடவுச்சொற்களை சரியாக ஊகிக்க முடியுமா? நம்மால் முடியாத விடயம் எவ்வாறு இணையக் ஊடுறுவலாளர்களால் முடிகிறது?

அவர்களை தடுக்கும் நடவடிக்கையாக, இப்போது கடவுச்சொற்கள் பாதுகாப்பு குறித்து, மென்பொருள் வல்லுனர்கள் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர். லங்காஸ்டர் பல்கலைக்கழகம், பீகிங் பல்கலைக்கழகம் மற்றும் பியூஜி நார்மல் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த கணித மற்றும் கணினி ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து ஆராய்ந்து, ‘டார்கெஸ்’ என்ற மென்பொருளை உருவாக்கியுள்ளனர்.

‘டார்கெஸ்’, பெயருக்கேற்றபடி முன்பின் தெரியாத, 100 பேரின் கடவுச்சொற்களில், 72 பேருடையதை சரியாக கண்டுபிடித்து விடுகிறது. சற்று பாதுகாப்பான கடவுச்சொற்களை உருவாக்குபவர்களில் கூட, 32 பேருடையதை டார்கெஸ், சரியாக கண்டுபிடித்துக் காட்டியது.

ஆய்வாளர்களின் நோக்கம், இணையத்தில் திருடுவது அல்ல. இணையக் களவாணிகளைப் போல யோசித்து, அவர்கள் அப்பாவிகளிடம் திருட முடியாதபடி தடுப்பது தான்.

‘இன்றைக்கும் பலர், எளிதில் ஊகிக்கக்கூடிய கடவுச் சொற்களை வைத்திருப்பதும், எல்லா இணையக் கணக்குகளுக்கும், ஒரே கடவுச் சொற்களை பயன்படுத்துவதும் தான் இணையக் களவாளிகளுக்கு வேலை சுலபமாகிவிடுகிறது’ என, மூன்று பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டார்கெஸ் மென்பொருள் ஆய்வுக்கு, ‘யாஹூ’ கடவுச்சொல் திருட்டு போன்றவற்றில் அம்பலப்படுத்தப்பட்ட, கடவுச் சொற்களை ஆய்வாளர்கள் பயன்படுத்தினர். ‘பாஸ்வேர்ட்’ என்ற ஆங்கிலச் சொல்லையே கடவுச்சொல்லாக வைத்திருப்பது போன்ற, பரவலாக உள்ள வழக்கங்களை, டார்கெஸ் எளிதில் கண்டுபிடித்து சொல்லிவிட்டது.

எளிதில் ஊகிக்கக்கூடிய கடவுச்சொற்களை தவிர்ப்பது, அடிக்கடி கடவுச்சொற்களை மாற்றுவது, சிக்கலான கடவுச்சொற்களை உருவாக்கி பயன்படுத்துவது ஆகியவை, நல்ல வழக்கங்கள் என, தங்கள் ஆய்வுக் கட்டுரையில், ‘டார்கெஸ்’ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply