எலுமிச்சையின் 6 நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

Loading...

Juicy Lemons HD Desktop Background உடலின் ஒவ்வொரு பாகங்களுக்கும் சகல நன்மைகளையும் வழங்கும் எலுமிச்சை பழச்சாறினை அன்றாடம் காலையில் குடித்துவந்தால் செரிமானக்கோளாறு பிரச்சனைகள் குணமாகும்.

கால்சியம், விட்டமின் சி, விட்டமின் பி, இரும்புச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், ஆன்டி ஆக்ஸிடண்ட் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.


எலுமிச்சையின் 6 நன்மைகள்

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, தேன் சேர்த்து குடித்து வந்தால், குடலியக்கம் சீராக செயல்படுவதோடு, குடலில் தங்கியுள்ள அனைத்து நச்சுக் களும் வெளியேறிவிடும்.
எலுமிச்சையில் ஆன்டி பாக்டீரியல் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே எலுமிச்சை சாற்றுடன், சிறிது துளசி மற்றும் தேன் சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப் புண் குணமாகிவிடும்.
எலுமிச்சையில் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட் டுகள் நிறைந்துள்ளதால், அது பாதிப்படைந்த சரும செல்களை புதுப்பித்து, இளமையான தோற்றத்தை தக்க வைக்கும்.
எலுமிச்சையில் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பொட்டாசியமும் உள்ளது. எனவே உயர் ரத்த அழுத்தம் இருந்தால், அப்போது உண்ணும் உணவுகளில் எலுமிச்சை சாற்றை பிழிந்து சாப்பிட்டால், ரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்.
எலுமிச்சையில் விட்டமின் `சி’ அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளதால், அதனை சாப்பிட்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். இதனால் எந்த விதமான நோய் தாக்கு தல்களில் இருந்தும் தப்பிக்கலாம்.
எலுமிச்சை ஒரு சிட்ரஸ் பழம். அத்தகைய பழத்தின் சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களானது கரைக்கப்படும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply