என் அப்பா இறந்த போது முதல் ஆளாக வந்தது அந்த நடிகர் தான்- கௌதம் உணர்ச்சிப்பூர்வமான பேட்டி

Loading...

downloadகௌதம் மேனன் உண்மையாகவே மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார். ஒரு வழியாக அச்சம் என்பது மடமையடா படம் திரைக்கு வந்து வெற்றி நடைப்போடுகின்றது.


இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கௌதம் பேசுகையில் சூர்யாவிற்கும், தனக்குமான மோதல், நட்பு குறித்து பேசியுள்ளார்.


இதில் ‘என் அப்பா இறந்த போது நான் வெளிநாட்டில் இருந்தேன், உடனே சூர்யாவிற்கு போன் செய்து என்ன செய்வது என்றே தெரியவில்லை என பேசினேன்.


உடனே சூர்யா என் வீட்டிற்கு சென்று அனைத்து வேலைகளையும் பார்த்துவிட்டு, பிறகு எனக்கு போன் செய்தார்.


அத்தனை நட்பு அவரிடமிருந்தது, ஆனால், துருவ நட்சத்திரம் படத்தில் அவர் என்னை நம்பவில்லையோ என்று எனக்கு தோன்றியது.


இதன் மூலம் எங்களுக்குள் சின்ன விரிசல் ஏற்பட்டது, பிறகு இருவரும் ஒரே மேடையில் சந்தித்த பின் பேச ஆரம்பித்து விட்டோம்’ என கூறியுள்ளார்.

Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply