என்றும் இளமையாய் இருக்க இதைச் செய்யுங்கள்

Loading...

%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b3%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95நம் வாழ்க்கையில் நகரும் ஒவ்வொரு நொடியிலும், நம் வயது அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றது. என்ன செய்தாலும் நம் வயது அதிகரிக்கும் அதே வேலையில், அதனினை சரியாக பார்த்துக் கொள்ளா விட்டால் நம் உடலில் ஏகப்பட்ட கோளாறுகள் ஏற்படும்.

உடலைச் சீராக பார்த்துக் கொள்வது என்பது ஆரோக்கிய உணவு முறைகள், உடற்பயிற்சி மற்றும் சரும பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் அதிக கவனமுடன் இருப்பதே ஆகும். இவற்றைச் சரியாக பராமரிக்கும் போது உடலும் மனதும் என்றும் இளமையாகவே இருக்கும்.

இங்கு என்றும் இளமையாய் இருக்கக் கடலை மாவை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பார்ப்போமா??

* இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.

பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊறவிடவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என்று இருக்கும்.

* குளிக்கும் போது கடலை மாவு பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். சுருக்கமின்றி இளமையோடு காட்சியளிக்கலாம்.

*இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்துக் கலக்கவும். பின்னர் கலவையை நன்றாக முகத்தில்பூசவும். பத்து நிமிடம் கழித்து இதனைக் குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகும், இளமையோடு காட்சி தரும்.

* 1 டீஸ்பூன் கடலை மாவை ஒரு டீஸ்பூன் பாலில் ஊறவையுங்கள். இதனுடன் கால் டீஸ்பூன் முல்தானி மட்டி பவுடரைச் சேர்த்துக் கலக்குங்கள். பிறகு இதை முகத்தில் போட்டு, உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை ஒருநாள் விட்டு ஒருநாள் தொடர்ந்து செய்து வந்தால் பருக்கள் படிப்படியாக மறைந்து போகும்.

* தோலுடன் இருக்கும் கடலை பருப்பு அரை கிலோ, துளசி இலை 50 கிராம், வேப்பங்கொழுந்து 5 கிராம் இவற்றை நிழலில் உலர்த்தி. நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் போட்டு அதில் இரண்டு துளி எலுமிச்சைசாறு சேர்த்து முகத்துக்கு ‘பேக்’ போட்டு ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள். வாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால், பளபளவென்று முகம் பிரகாசிக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply