என்றும் இளமையாய் இருக்க இயற்கை வழிகள்

Loading...

%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b3%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95வயதாக யாருக்கும் பிடிக்காது என்றாலும், ஒவ்வொரு நாளும் நம் வயது அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். இதனை யாராலும் தடுக்க முடியாது. இருந்தாலும் வயதானாலும் உடல் தோற்றத்தை இளமையாக வைத்துக் கொள்ள முடியும்.

இங்கு வயதானவர்களும் இளமையாய் தோன்றச் செய்யும் சில இயற்கை வழிமுறைகளை வழங்கியுள்ளோம்..


அரிசி நீர்:

பெண்கள் அரிசியை 2 கப் நீரில் ஊற வைத்து, வடிகட்டி, அந்த நீரினால் முகத்தைக் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் சருமம் இறுக்கமடையும். கன்னங்கள் பூசியது போலக் காணப்படும். இது சருமத்திற்குப் பளபளப்பையும் தரும்.


பச்சைப் பயிறு:

பெண்கள் பச்சைப்பயிறு பேஸ்ட் செய்து பூசுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். தினமும் பச்சைப் பயிரை பொடி செய்து அதனை மாஸ்க் போல முகத்தில் போட்டு வந்தால் சருமத்தை என்றும் இளமையோடு வைத்துக் கொள்ளலாம்.


கிரீன் டீ:

பெண்கள் தினமும் கிரீன் டீ குடிப்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். அது சருமத்தில் ஏற்படும் சின்னச் சின்னச் சுருக்கங்களையும் போக்குவதால் அதனை நாள்தோறும் குடிக்க வேண்டும். கிரீன் டீ குடித்து வந்தால் வயதானாலும் சருமம் இளமையாகவே இருக்கும்.


மசாஜ்:

பெண்கள் ஆயில் மசாஜ் செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. நரம்புகளுக்கும், தசைகளுக்கும் புத்துணர்வு தரும்.


புதினா இலை:

புதினா இலையைப் பேஸ்ட் செய்து அதனை முகத்தில் மாஸ்க் போல் போட்டுக் கொள்ள வேண்டும். காரணம் அவை சருமத்தில் இறந்த செல்களை அகற்றி, இளமையாக வைக்கிறது.


மஞ்சள்:

மஞ்சளை அதிகமாய் உணவிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அழகிற்கும் பயன்படுத்த வேண்டும். கெமிக்கல் கலந்த கிரீம்கள் பயன்படுத்துவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இயற்கையான அழகு தரும் பொருட்களையே எப்போதும் பயன்படுத்த வேண்டும்.

Loading...
Rates : 0
Loading...
VTST BN

Leave a Reply