எண்ணெய் சருமத்தை பராமரிக்க இயற்கை வழிமுறைகள்

Loading...

%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95 எண்ணெய் பசை சருமம் இருப்பவர்கள் தங்களின் சருமத்தில் உள்ள எண்ணெய்யை அவ்வப்போது நீக்கிவிட வேண்டும். நீக்காவிட்டால், முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

சருமத்திற்கு இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தும் போது, சருமத்தின் ஆரோக்கியம் மேம்படும். உங்களின் சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், இயற்கை டோனர்களைப் பயன்படுத்துவது நல்ல பலனளிக்கும்.வினிகர்

வெள்ளை வினிகரை நீரில் சரிசமமாக கலந்து, அதனைப் பஞ்சில் நனைத்து, முகத்தைத் துடைத்து எடுத்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகம் பொலிவோடு காணப்படும்.புதினா

சிறிது புதினா இலைகளை நீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு, அந்நீரைக் குளிர வைத்து, பின் அதனைப் பஞ்சு பயன்படுத்தி முகத்தைத் துடைத்து எடுக்கலாம்.கற்றாழை

கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ, முகம் பளிச்சென்று இருக்கும்தயிர்

வெள்ளரிக்காயை துருவி, அதில் தயிர் சேர்த்துக் கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ, முகத்தில் உள்ள எண்ணெய் பசை மட்டுமின்றி, அழுக்குகளும் முழுவதுமாக நீக்கப்படும்.ஐஸ் கட்டி

குளிர்ந்த நீர் அல்லது ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்தைச் சிறிது நேரம் மசாஜ் செய்தால், முகத்தில் உள்ள அழுக்குகள் நீக்கப்படுவதோடு சருமத்துளைகள் இறுக்கப்பட்டு, எண்ணெய் பசை வெளிவருவதைத் தடுக்க முடியும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply