உலகின் முதல் தானியங்கி வாடகை கார் சிங்கப்பூரில் அறிமுகம்

Loading...

%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%b5சென்னையின் பரப்பளவில் நான்கில் மூன்று பங்கு மட்டுமே கொண்டது சிங்கப்பூர். ஆனால், தொழில் வளர்ச்சியிலும், பொருளாதாரத்தி்லும் மிகப் பெரிய சக்தியாக அந்நாடு உருவெடுத்துள்ளது. வெட்டவெளியாகக் கிடந்த தரிசு நிலங்களெல்லாம் எட்டடுக்கு மாளிகைகளாக அங்கு மாறியிருக்கின்றன. சிங்கப்பூரின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்று 30 ஆண்டுகள் அந்தப் பதவியில் நீடித்தவர் லீ குவான் யூ. இவரது காலத்தில்தான் வளர்ச்சியில் வெற்றி நடைபோடத் தொடங்கியது அந்நாடு. வெறும் காடாக இருந்த தேசத்தை, இன்று உலகமே திரும்பிப் பார்க்கிறது. கடின உழைப்பு, தொழில்நுட்பம், பொருளாதார வளர்ச்சி ஆகியவையே சிங்கப்பூரின் வெற்றிக்குக் காரணம். அந்த வரிசையில் இப்போது அடுத்த மைல் கல்லை எட்டியுள்ளது அந்நாடு. பல்வேறு முன்னணி நிறுவனங்களெல்லாம் ஆட்டோமேடிக் கார் தொழில்நுட்பத்தை மேம்படுத்த இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கும்போது, சி்ங்கப்பூரில் அந்த டெக்னாலஜியில் வடிவமைக்கப்பட்ட டாக்ஸி பொதுமக்கள் பயன்பாட்டுக்கே வந்துவிட்டது. நூ-டொனாமி என்ற ஆட்டோமொபைல் நிறுவனம்தான் இந்த தானியங்கி காரை வடிவமைத்துள்ளது. கடந்த வியாழக்கிழமை முதல் இந்த ஆட்டோமேடிக் டாக்ஸி சேவை சிங்கப்பூரில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. முதல்கட்டமாக 2.5 சதுர மைல்கள், அதாவது 6.4 சதுர கிலோ மீட்டர்கள் வரை இந்த சேவை வழங்கப்படுகிறது. இந்த ஆட்டோமேடிக் டாக்ஸி சேவைக்கு ஒன் நார்த் என்று பெயரிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வழித்தடத்திலான சேவையை மட்டுமே தற்போது அந்நிறுவனம் வழங்கி வருகிறது. எதிர்காலத்தில் அதனை மேலும் பல வழித்தடங்களுக்கு விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு போன் கால் செய்தால் போதும், உங்களைத் தேடி இந்தக் ஆட்டோமேடிக் டாக்ஸி வருமாம். டிரைவரே இல்லாத டாக்ஸி என்றாலும், அந்தக் காரின் செயல்பாடுகளைக் கண்காணிக்க உதவியாளர் ஒருவர் அதனுடன் வருவார். பல கட்ட ஆராய்ச்சிக்குப் பிறகு இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்புக்காக இப்படி ஒர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தானியங்கி டாக்ஸியில் பயணம் செய்ய அனைவரும் போட்டா போட்டி போடுவதால், தற்போது அதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது, தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மட்டுமே தானியங்கி டாக்ஸியில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். மொத்தத்தில், சிங்கப்பூரில் அறிமுகமான இந்த சேவை நாடு கடந்து அனைத்து இடத்திலும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply