உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் டான் கார் பறிமுதல்

Loading...

%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%86%e0%ae%be%e0%ae%a3உரிய ஆவணங்கள் இல்லாமல், சென்னையிலிருந்து கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் டான் கார் வாளையார் சோதனைச் சாவடியில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வாளையார் சோதனைச் சாவடி வழியாக கேரள எல்லைக்குள் நுழைய முயன்ற கன்டெய்னர் லாரி ஒன்றை வணிகவரித் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, காருக்குள் பல கோடி மதிப்புடைய ரோல்ஸ்ராய்ஸ் கார் ஒன்று இருந்தது. இதுதொடர்பாக, வணிகவரித்துறையினர் ஓட்டுனரிடம் ஆவணங்களை கேட்டனர். ஆனால், கேரள வாட் வரி விதிகளுக்கு ஏற்ற உரிய ஆவணங்கள் இல்லை. அந்த கார் சென்னையிலிருந்து கொச்சியிலுள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற இருந்த நிகழ்ச்சிக்காக கொண்டு செல்லப்படுவதாக டீலரிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெறுவதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால், அந்த காரை வணிகவரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இறக்குமதி ஆவணங்கள் சரியாக இருந்தாலும், அந்த கார் ரூ.8 கோடி மதிப்புடையது என்றும், அதற்குரிய ரூ.1.75 கோடி வரி செலுத்தினால் விட்டுவிடுவதாக வணிகவரித் துறை தெரிவித்துவிட்டது. இதையடுத்து, காரை அனுப்பிய சென்னையை சேர்ந்த KUN டீலர் நீதிமன்றத்தை நாடி விளக்கம் அளித்தனர். மேலும், அந்த கார் கொச்சியில் நடைபெறும் நிகழ்ச்சி முடிந்தபின் அதே வாளையார் சோதனைச் சாவடி வழியாக சென்னைக்கு திருப்பி எடுத்து வரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, காரை விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட அந்த ரோல்ஸ்ராய்ஸ் டான் கார் விடுவிக்கப்பட்டிருப்பதாக வணிகவரித்துறை தெரிவித்துள்ளது. மேலும், கார் திரும்பவும் வாளையாறு சோதனைச் சாவடி வழியாக சென்னை செல்கிறதா என்பதையும் கண்காணிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாத இறுதியில்தான் இந்த ரோல்ஸ்ராய்ஸ் டான் கார் ரூ.6.25 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. திறந்து மூடும் கூரை வசதி கொண்ட கன்வெர்ட்டிபிள் ரகத்தை சேர்ந்த விலையுயர்ந்த சொகுசு கார் மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply