உபேருக்குப் போட்டியாக வரும் கூகுள் கால் டாக்சி சேவை

Loading...

%e0%ae%89%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%b0ஒரு காலத்தில் கால் டாக்சி புக் பண்ணி பயணம் மேற்கொள்வது என்பது பணக்காரர்களுக்கும், மேல்தட்டு மக்களுக்கும் மட்டுமே சாத்தியமான ஒரு விஷயம். ஆனால், இன்றைக்கு நிலைமை அப்படியல்ல. ரோட்டுக் கடையில் நைட் டின்னர் முடித்துவிட்டு ஸ்மார்ட் போனில் கால் டாக்சி புக் பண்ணி வீட்டுக்குச் செல்லலாம். அந்த அளவுக்கு அனைவரும் பயன்படுத்தக் கூடிய வகையில் மலிவாகிப் போனது கால் டாக்சி சேவைகள். ஓலா, உபேர், ஃபாஸ்ட் டிராக் என பல நிறுவனங்கள் மார்க்கெட்டில் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போது புதிதாக கூகுள் நிறுவனமும் களமிறங்கப் போகிறது. முன்பு உபேருடன் பார்ட்னர்ஷிப் வர்த்தகம் மேற்கொண்டு வந்தது அந்நிறுவனம். சுமார் 258 மில்லியன் டாலரை உபேர் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தது சர்ச் எஞ்ஜின் ராஜாவான கூகுள். இந்த நிலையில், தனியாக ஒரு அப்ளிகேஷனை உருவாக்கி அதன் மூலம் கால் டாக்சி சேவையை வழங்கத் தயாராகி வருகிறது கூகுள். இதற்கான அப்ளிகேஷனை தற்போதைக்கு சிறிய அளவில் வடிவமைத்துள்ள அந்நிறுவனம், முதல் கட்டமாக சான் பிரான்சிஸ்கோவில் அந்த சேவையைத் தொடங்க முடிவு செய்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் வலைப் பக்கத்திலேயே கால் டாக்சிக்கான அப்ளிகேஷன் இடம்பெற்றிருக்குமாம். அதைப் பயன்படுத்தி அருகில் உள்ள டாக்சிகளை எளிதில் வாடிக்கையாளர்கள் புக் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கிறது அந்நிறுவனம். உபேருக்கும், இதற்கும் இடையேயான மிகப் பெரிய வித்தியாசம் என்னவென்றால், கால் டாக்சி புக்கிங் எடுக்கும் டிரைவர்கள் கூகுள் நிறுவனத்துக்கு கமிஷன் வழங்க வேண்டியதில்லை. இந்தியாவில் உபேர் டாக்சி ஓட்டும் டிரைவர்கள் அனைவரும், ஒவ்வொரு பயணத்துக்கும் 25 சதவீதத் தொகையை அந்த நிறுவனத்துக்கு வழங்க வேண்டும். இந்த முறை கூகுளில் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வாடகைக் கார் வைத்திருக்கும் பெரும்பாலானோர் உபேரை விட்டு வெளியேறி கூகுள் பக்கம் வருவார்கள் என எதிர்பார்க்கிறது அந்நிறுவனம். ஆனால், அது மிகப் பெரிய சவாலாகத் தான் கூகுளுக்கு இருக்கப் போகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்… கால் டாக்சி துறையில் கோலோச்சி கொடி நாட்டப் போவது கூகுளா அல்லது உபேரா அல்லது ஓலாவா என்று

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply