உடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர் குடிக்கலாம் வாங்க

Loading...

%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%aeவெயிலின் தாக்கம் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இத்தகைய வெப்பத்தை தணிப்பதற்கு பல்வேறு பானங்களை வாங்கிப் பருகுகின்றோம். ஆனால் இந்த பானங்களில் இளநீர் தான் மிகவும் சிறந்த பயனைக் கொடுக்க கூடியதாகும். இதில் எந்த ஒரு கலப்படமும் இல்லாததால் இதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும். அதிலும் இளநீர் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளையும் சரி செய்யும் குணம் வாய்ந்தவையாகும். எனவே உடலில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க தினமும் ஒரு இளநீரை பருகி வாருங்கள்.

இளநீரில் செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. கோடைக்காலங்களில் உடலில் பித்தநீர் அதிகரித்து பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கும். அதை தவிர்க்க இளநீர் பருகலாம்.

மேலும் சருமம் மற்றும் கூந்தலுக்கு எந்த ஒரு பிரச்சனையும் நேராமல் இருக்க வேண்டுமானால் இளநீரை பாதிப்படைந்த இடத்தில் நேரடியாக பயன்படுத்தலாம். இவ்வாறு பல சிறப்பம்சங்களைக் கொண்டது இளநீர்.

இளநீரை குடித்து வருவதுடன், அதனை சருமத்திற்கு தடவி வந்தால் அது சருமத்தில் வறட்சி ஏற்படுவதை தடுக்கும். இளம் வயதிலேயே முதுமை தோற்றம் வர கூடாதெனில் இளநீரை தினமும் குடித்து வாருங்கள்.

அதேபோன்று பொடுகு, பேன் போன்றவற்றால் அவஸ்தைப்படுபவர்கள், இளநீரைக் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் குறித்த நோயியிலிருந்து பாதுகாப்பு பெற முடியும்.

தினமும் இளநீர் குடித்து வந்தால் அது இரத்த ஓட்டத்தை சீராக வைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். இளநீரை தினமும் குடித்து வந்தால் உடலின் சக்தியானது குறையாமல் இருக்கும். அதுமட்டுமன்றி இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ள தினமும் இளநீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், இளநீரைக் குடித்து வந்தால் உடலில் காய்ச்சலை ஏற்படுத்திய வைரஸானது அழிந்துவிடும். இதே போன்று சிறுநீரகக் கல் பிரச்சனை உள்ளவர்களுக்கும் இளநீர் ஒரு சிறந்த பானமாகும்.

செரிமான பிரச்சனை உள்ளவர்கள், தினமும் இளநீரைக் குடித்து வந்தால் செரிமானம் சீராக நடைபெறும். காலரா, வயிற்றுப்போக்கு போன்றவற்றால் பாதிக்கப்படும் போது, உடலில் உள்ள நீர்ச்சத்தானது குறையும். எனவே அப்போது இளநீரைக் குடித்தால் உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவை அதிகரிக்கலாம்.

பொட்டாசியம் குறைபாட்டினால் அடிக்கடி தசைப்பிடிப்பு ஏற்படும். இளநீர் குடிப்பதன் மூலம் உடலில் பொட்டாசியத்தின் அளவு அதிகரித்து தசைப்பிடிப்பு ஏற்படுவது குறையும். இளநீரை தொடர்ந்து குடிப்பதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அத்துடன் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், இளநீரைக் குடிப்பதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்

இளநீர் சிறுநீர் பெருக்கத்தினை அதிகரித்து உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீரின் மூலம் வெளியேற்றிவிடும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால், உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்களை குறைந்து விடும்.

கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் இளநீரைப் பருகினால் அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக வளர்வதோடு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, கர்ப்ப காலத்தில் நோய்களின் தாக்கத்தில் இருந்து விலகி இருக்கலாம்.

எனவே நாகரீகம் என்ற பெயரில் தேவையற்ற குளிர்பானங்களை வாங்கி உடலைக் கெடுத்துக் கொள்ளாமல், இயற்கை தந்த வரமான குளிர்ச்சிப் பொருந்திய இளநீரை குடியுங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply