உங்கள் மேக்கப்பை கச்சிதமாக்க ஒரு செல்லோடேப் போதும் எப்படி என்று தெரியுமா

Loading...

%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%95%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%aeநாம் போடும் மேக்கப் சிறப்பான முறையில் மிகவும் கட்சிதமாக இருக்க, ஒரே ஒரு செல்லோடேப்பை பயன்படுத்தி மிகவும் எளிதாக செய்து விடலாம்.

ஆனால் ஒருசிலருக்கு மிகவும் சென்சிடிவான தோல் இருந்தால், செலோடேப்பை பயன்படுத்தும் முன் ஒவ்வாமை சோதனை மேற்கொள்ள வேண்டும்.

ஏனெனில் செலோ டேப்பில் உள்ள பிசின் ஒரு சிலருக்கு ஒவ்வாமையை தூண்டிவிடும் தன்மைக் கொண்டது.

எனவே செல்லோ டேப்பைக் கொண்டு மேக்கப் போடும் போது, செலோ டேப்பை மெல்லிய துண்டுகளாக வெட்டி, அவைகளை உங்களின் தோலின் மீது இரண்டு முறை ஒட்டி பிய்த்து எடுக்க வேண்டும்.

பின் அதில் உள்ள பிசின் குறைந்து இருக்கும் இப்போது செல்லோ டேப்பை உங்களின் முகத்தில் பயன்படுத்தலாம்.

மேலும் நீங்கள் மேக்கப் பொடுவதற்கு ஏதேனும் புதிதாக நெயில் பாலிஷ் அல்லது லிப் ஸ்டிக் வாங்கும் பொழுது அது உங்களுக்கு எவ்வாறு இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஒரு செலோ டேப்பை வெட்டி எடுத்து அதன் மீது சிறிது வண்ணத்தை பூச வேண்டும்.

அதன் பின் அதை உங்களின் உதடு அல்லது நகத்தின் மீது வைத்து, புதிய பொருட்கள் உங்களுக்கு எவ்வாறு இருக்கும் என்பதை சோதனை செய்துக் கொள்வதற்கு செல்லோ டேப் பயன்படுகிறது.


செல்லோ டேப்பை வைத்து மேக்கப் போடுவது எப்படி?


கண்கள்

செலோ டேப்பின் பசையை தோலில் இரண்டு அல்லது மூன்று முறைகள் தோலில் ஒட்டி பசையை நீக்கியப் பின்னர் கண்களின் மூலையில் புருவங்களுக்கு இணையாக செலோ டேப்பை ஒட்டிக்கொள்ள வேண்டும்.

பின் கண்களின் உள் பக்கத்திலிருந்து இருந்து தொடங்கி, வெளிப்பக்கம் வரை, ஒரு மெல்லிய கோடை ஐ லைனரில் வரைய வேண்டும்.

பின் 20 நிமிடம் வைத்து, நன்றாக உலர்ந்த பின் ஒட்டிய செலோ டேப்பை மிக விரைவாக எடுக்க வேண்டும். இப்பொழுது உங்களுக்கு மிகவும் சுத்தமான கூர்மையான இறகு வடிவ கண் லைனர் கிடைத்திருக்கும்.


நகங்கள்

சிறிய கீற்றுகளாக செலோ டேப்பை வெட்டிக் கொள்ள வேண்டும். உங்களின் நகம் முடியும் இடம் மற்றும் நகங்களின் இரு பக்கங்களிலும் வெட்டி வைத்த செலோ டேப்பை ஒட்ட வேண்டும்.

உங்கள் கை விரல்கள் மற்றும் கால் விரல்கள் அனைத்திலும் இதைச் செய்ய வேண்டும். அதன் பிறகு வழக்கம் போல் உங்களின் நகங்களின் மீது நெயில் பாலிஷை போட வேண்டும்.

பின் நகத்தில் போட்ட பாலிஷ் உலர்ந்ததும் செல்லோ டேப்களை விரைவாக நீக்க வேண்டும்.


புருவங்கள்

புருவங்களுக்கு மேக்கப் போடும் போது, நெற்றியின் மீது படாமல் இருப்பதற்கு, செல்லோ டேப்பை உங்களின் வில் வடிவ புருவத்தின் வளைவுகளின் கீழ் ஒட்ட வேண்டும்.

அதன் பிறகு புருவத்தை தீட்டி முடித்ததும் செலோ டேப்பை நீக்க வேண்டும். இதனால் உங்களுக்கு கூர்மையான சுத்தமான மற்றும் நன்கு வரையறுக்கப்பட்ட அழகான புருவம் கிடைக்கும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply