உங்களை அழகாக்க காபிக் கொட்டைகளையும் பயன்படுத்தலாம்

Loading...

%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8aகாபியை பிடிக்காதவர்கள் மிகவும் குறைவு என்றே கூறலாம். காபியின் மணம் மற்றும் ருசி நம் உடலில் உடனடி புத்துணரச்சியை வழங்கி விடும். உடல் மட்டுமில்லாமல் நம் அழகை மெருகேற்றவும் காபிக் கொட்டைகளை பயன்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா..

முதலில் தரமான காபிக் கொட்டைகளை வாங்கி பொடித்துக் கொள்ள வேண்டும். இவற்றை எப்படி பல்வேறு அழகுக்கு உபயோகப்படுத்தலாம் என்பதை பார்ப்போமா.


காபிக் கொட்டை ஸ்க்ரப்:

அரைத்த காபிப் பொடியில் சிறிது ஆலிவ் எண்ணெய் மற்றும் நீர் கலந்து, முகத்தில் ஸ்க்ரப் போலத் தேய்த்தால் அழுக்குகள் நீங்கி, சருமத்தை இறுக்கும். முகத்தில் மாசு மரு இல்லாமல், பளிச் என்று இருக்கும்.


கூந்தலுக்கு நிறம் தரும்:

உங்களுக்கு பிரவுன் நிற கூந்தல் வேண்டுமெனில், இந்தக் குறிப்பினை தேர்ந்தெடுக்கலாம். காபிப் பொடியில் டிகாஷன் தயார் செய்யவும். நீரில் காபிப் பொடியை போட்டு நன்றாகக் கொதிக்க விடு வேண்டும்.

பின் சில நிமிடங்களில் ,அடுப்பை அணைத்து வடிகட்டி டிகாஷன் தயார் செய்து கொண்டு, இதனைத் தலையில் கூந்தல் முழுவதும் தடவி, இதமாக மசாஜ் செய்யுங்கள்.

அரை மணி நேரம் கழித்து, கூந்தலை அலசுங்கள். இது கூந்தலுக்கு அடர் பிரவுன் நிறத்தினை தரும். கந்தலை மிருதுவாக்கும். கூந்தலுக்குப் பளபளப்பை தரும்.


தளர்வான சருமம்:

பொதுவாக முகம் 30 வயதுகளில் தொய்வடைய ஆரம்பிக்கும். இதன் காரணமாக நாளடைவில், வயதான தோற்றம் வந்துவிடும். இந்தப் பிரச்சனைக்கும் காபிக் கொட்டை நல்ல பலனைத் தருகிறது.

காபிப் பொடியில், சிறிது நீர் கலந்து முகத்தில் மாஸ்க் போலப் போடுங்கள். நன்றாகக் காய்ந்ததும், முகம் கழுவி விடுங்கள். இது, சருமத்தை இறுகச் செய்யும்.


ஃபேஸ்பேக்:

காபிப் பொடியுடன் சிறிது யோகார்ட், தேன், கலந்து முகத்தில் மாஸ்க் போல போடுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவினால், உங்கள் சருமம் மிளிரும் என்பது உண்மை. சுருக்கங்கள் மறைந்து, மிருதுவாகிவிடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply