இயற்கையான முறையில் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வழிகள்

Loading...

%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4இரத்த தட்டுகளின் எண்ணிக்கை (பிளேட்லெட்) ஒருவரின் ஆரோக்கியக் குறைபாடைக் குறிக்கின்றது. சரியான அளவை விட கீழே குறையும் பிளேட்லெட்களின் எண்ணிக்கை ஒருவர் நோய்வாய்பட்டிருக்கின்றார் என்பதைக் குறிக்கின்றது.

பிளேட்லெட்களின் எண்ணிக்கை குறைய காரணம் எலும்பு மஜ்ஜையில் பிளேட்லெட்களின் உற்பத்தி குறையும் பொழுது அல்லது இரத்த ஓட்டத்தில் பிளேட்லெட்கள் அழிக்கப்படும் பொழுது, அல்லது கல்லீரல் அல்லது மண்ணீரல் போன்றவற்றில் ப்ளேட்லெட்கள் அழிக்கப்படும் பொழுது, ரத்தத்தில் ப்ளேட்லெட்களின் எண்ணிக்கை குறைகின்றது.

பப்பாளி இலைச் சாறு:

த்றோம்போசைடோபீனியா மற்றும் டெங்குவை குணப்படுத்தும் ஒரு சரியான சிகிச்சை,பப்பாளி இலைச் சாறு ஆகும். இது ஆயுர்வேத சிகிச்சை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பப்பாளி இலைச்சாற்றுடன் தேன் கலந்து எடுத்துக் கொள்வது நல்லது.


கற்றாழை:

சுமார் 200 க்கும் மேற்பட்ட சத்துக்கள் உள்ள இந்த மூலிகை ஒருவரின் ப்ளேட்லெட்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.


நெல்லிக்காய்:

ஒருவரின் ப்ளேட்லெட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. ஒரு நாளைக்கு ஒரு தேக்கரண்டி நெல்லிக் சாறு இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.


வைட்டமின் கே:

வைட்டமின் கே நிறைந்த அந்த உணவுகள் இரத்த உறைதல் மற்றும் வீக்கம் குறைவதற்கு உதவியாக இருக்கும், மேலும் இது ப்ளேட்லெட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகின்றது.

கீரை மற்றும் காலே போன்ற பச்சைக் காய்கறிகள் சாலட் ப்ரோக்கோலி, காலிஃபிளவர் போன்ற காய்கறிகள் சோயா, முட்டைகள். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மீன், அக்ரூட் பருப்புகள், முட்டை, ஆளிவிதை முதலியனவற்றில் உள்ளன. இந்த உணவுகள் ப்ளேட்லெட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகின்றன.

பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள ஆண்டியாக்ஸிடண்ட்கள்: பெர்ரி, சிவப்பு கொய்யா, கரும் பச்சை காய்கறிகள், பூசணி, ஸ்குவாஷ், பீட்ரூட், முதலியன ப்ளேட்லெட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகின்றன. கீரை, முழு தானியம், மற்றும் ஆரஞ்சு, போன்றவற்றில் காணப்படுகிறது.


பூசணிக்காய்:

பூசணிக்காய் உங்கள் சத்துக்கள் குறைந்த இரத்த தட்டுகளின் எண்ணிக்கை மேம்படுத்த உதவும் மற்றொரு பயனுள்ளதாக உணவு ஆகும். இதில் வைட்டமின் A நிறைந்துள்ளது. இது செல்களுக்கு தேவையான புரதங்களை அளித்து, இரத்த தட்டுகளின் உற்பத்திக்கு உதவுகிறது.


வைட்டமின் சி:

வைட்மின் சி நுகர்வு ப்ளேட்லெட்களின் எண்ணிக்கை அதிகரிக்க அவசியம். எலுமிச்சை, தக்காளி, ஆரஞ்சு, ப்ராக்கோலி, முதலியனவற்றில் வைட்டமில் சி அதிக அளவில் உள்ளன.

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் தேன் உடன் கலந்து எடுத்துக் கொள்ளது ஒருவரின் ப்ளேட்லெட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இது ஒருவரின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஒரு அதிசய உணவாகும். இவை தவிர, ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வதன் மூலம் ப்ளேட்லெட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply