இயற்கையான பேஸ் வாஷ் மூலம் முகச் சுருக்கங்களை சரி செய்யலாம்

Loading...

%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b7%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%aeஇன்றையச் சூழலில் வெளியில் சென்று வந்தாலே பல்வேறு சரும பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகின்றது. நம்மில் பலரும் சரும பிரச்சனைகளை சரி செய்வதாகக் கூறி பல்வேறு இரசாயனங்களை முகத்திற்குப் பயன்படுத்தி வருகின்றனர்.

இரசாயன கலப்புகள் இல்லாமல் இயற்கை முறையில் தேங்காய் எண்ணெய் மூலம் சரும சுருக்கம், முகப்பரு, கரும்புள்ளி, தேமல் எனப் பல பிரச்சனைகளைப் போக்க முடியும். இரசாயனங்களில் இருக்கும் அமிலத்தன்மை சருமத்தில் சுருக்கம் ஏற்படச் செய்யும்.

தேங்காய் எண்ணெய் கொண்டு செய்யும் இந்த ஃபேஸ் வாஷில் பாக்டீரியாவை எதிர்க்கும் குணங்கள் உள்ளன. அவை சருமத்தில் முகப்பருவை உருவாக்காமல் தடுக்கும். சுருக்கங்களைப் போக்கும். சரும பிரச்சனைகளை வராமல் காக்கும்.தேவையான பொருட்கள்:

தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
தேயிலை மர எண்ணெய் – 3 துளிகள்
லாவெண்டர் எண்ணெய் – 3 துளிகள்
தேன் – 2 டீஸ்பூன்

மேலே சொன்னவற்றை எல்லாம் நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். உங்களுக்கு என்ணெய்பசை இருந்தால், இவற்றோடு சில துளி எலுமிச்சை சாறு கலந்து கொள்ளலாம். முகத்தை ஈரப்படுத்தியபின், இந்த ஃபேஸ் வாஷை கொண்டு முகத்தில் தேய்க்கவும். அரை நிமிடத்திற்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவிடுங்கள்.

முகத்தைக் கழுவிய பின்னர் பார்த்தால் உங்கள் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் வெளியேறி, மிருதுவான சருமமாக பொலிவுடன் இருக்கும். வாரம் 4 முறை இந்த ஃபேஸ் வாஷ் உபயோகப்படுத்தலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply