இன்னோவா க்ரிஸ்ட்டாவிற்கு சவால் விடுக்கும் மஹிந்திரா எம்பிவியின் ஸ்பை படங்கள் வெளியாகியது

Loading...

%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%8b%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95மஹிந்திரா நிறுவனம், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவிக்கு போட்டியாக புதிய எம்பிவியை உருவாக்கி வருகிறது. அவ்வப்போது இதன் சோதனைகள் மேற்கொள்ளப்படும் போது எடுக்கப்படும் ஸ்பை படங்கள் வெளியாகிறது. இந்தியாவில் எம்பிவி சந்தைகளில், முந்தைய தலைமுறை டொயோட்டா இன்னோவாவும், நிகழ் தலைமுறை டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியும் அசைக்கமுடியாத இடத்தை பெற்றுள்ளது. தற்போது, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவிற்கு சவால் விடுக்கும் வகையில் மஹிந்திரா நிறுவனம் ஒரு புதிய எம்பிவியை தயாரித்து வருகிறது. மஹிந்திராவின் எம்பிவி தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு, இங்கே பார்க்கவும்.
ஸ்பை படங்கள்;
மஹிந்திரா நிறுவனத்தின் இந்த பெயரிடப்படாத எம்பிவியின் சோதனைகள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அவ்வாறு, மஹிந்திரா எம்பிவியின் தமிழ்நாட்டின் உளுந்தூர்பேட்டை எக்ஸ்பிரஸ்வே பகுதியில் நடைபெறும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
அறிமுகம், விலை;
மஹிந்திராவின் பெயரிடப்படாத எம்பிவி, 2017-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்திய வாகன சந்தையில் விற்பனைக்கும் அறிமுகம் செய்யப்படும். மஹிந்திரா எம்பிவி, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவிக்கு போட்டி தரும் வகையில் சவாலான விலையிலேஎ அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசைன்;
டிசைன்படி, இந்த மஹிந்திரா எம்பிவி, கிரில்லை மூடியுள்ள ஹெட்லேம்ப்கள் உடைய வளைந்த முன் முனை கொண்டுள்ளது. இது, குறிப்பிட்ட கோணத்தில் சரிகின்ற ஆங்குளார் வின்ட்ஷீல்டும் கொண்டுள்ளது.
பின் தோற்றம்;
மஹிந்திரா எம்பிவியின் பின் பக்கம், கடுமையாக உருமறைப்பு செய்யப்பட்டிருந்தது. இதன் கேபின், சி-பிள்ளர் வரை நீண்டுல்லத்தை பார்த்தால், இது 3-வது வரிசை சீட்களும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஞ்ஜின்;
புதிய மஹிந்திரா எம்பிவிக்கு, 140 பிஹெச்பி மற்றும் 330 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனுடைய 2.2 லிட்டர் டர்போசார்ஜ்ட் டீசல் இஞ்ஜின் அல்லது 140 பிஹெச்பி மற்றும் 320 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனுடைய 1.99 லிட்டர் இஞ்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவைப்பட்டால், விரைவில் வெளியாக இருக்கும் ஸ்கார்ப்பியோவின் இஞ்ஜினும், இந்த புதிய மஹிந்திரா எம்பிவிக்கு பயன்படுத்தப்படலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply