இனி கார்களுக்கும் ஸ்டார் ரேட்டிங்… மத்திய அரசு திட்டம்

Loading...

%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8dநண்பர்கள் வட்டாரத்தில் புதிதாக யாராவது கார் வாங்கி வந்தால், நமது ரியாக்ஷன் என்னவாக இருக்கும்? அருமையான லுக்… சூப்பரான கலர்… பார்க்கவே செமயா இருக்கு மச்சான்.. என்று அதைப் புகழ்ந்து தள்ளுவோம். இல்லை, நம் சர்க்கிளில் இருக்கும் சில மேதாவி (!) நண்பர்கள், டெக்னிகலாகக் கேட்பதாக நினைத்துக் கொண்டு, மைலேஜ் என்ன கிடைக்கும்? ஃபுல்லி லோடட் வண்டியா? என்றெல்லாம் வினாக் கணைகளைத் தொடுப்பார்கள். ஆனால், நம்மில் ஒருவராவது அதன் பாதுகாப்பு அம்சங்களையோ, அதற்காக அந்த மாடலுக்கு வழங்கப்பட்டிருக்கும் தரச்சான்றிதழைப் பற்றியோ விசாரிக்கிறோமா? என்றால் நிச்சயம் இல்லை. ஏனென்றால் அது தேவையில்லாத ஒன்று என நினைக்கிறோம். கார்களின் பாதுகாப்பு அம்சக் குறைபாடுகளால் இந்தியாவில் நிகழும் விபத்துகளையும், உயிரிழப்புகளையும் எடுத்துப் பார்த்தால் அந்த விஷயத்தின் தீவிரத்தை உணர முடியும். அதைக் கருத்தில் கொண்டுதான் பாதுகாப்பு அம்சங்களின் அடிப்படையில் இனி புதிய கார்களுக்கு நட்சத்திர தரிவரிசை (ஸ்டார் ரேட்டிங்) வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக அண்மையில் மக்களவையில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இந்தத் தகவலை வெளியிட்டார். இந்த விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர், இந்தியாவின் பல கார்கள் பாதுகாப்பு அம்சங்களில் மிகவும் மோசமாக உள்ளதாக சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் தெரிய வந்துள்ளது என்று வேதனை தெரிவித்தார். சர்வதேச மற்றும் தேசிய கார் செயல்பாடுகளை மதிப்பிடுவதற்காக அண்மையில் மேற்கொண்ட சோதனையில், இந்தியாவைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் கார்கள் ஒரு மதிப்பெண்ணைக் கூட பெறவில்லையாம். இதைத் தொடர்ந்து, எதிரே வருபவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த காரின் முகப்புகளை மாற்றியமைக்குமாறு அண்மையில் அரசு அறிவுறுத்தியது. மேலும், அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை அதற்கான காலக் கெடுவும் விதிக்கப்பட்டது. இதனிடையே, புதிதாக அறிமுகமாகும் கார்கள், விபத்து பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும் எனவும் அரசு அறிவித்திருந்தது. 64 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனம் இயக்கப்பட்டு செயற்கையாக விபத்துக்குள்ளாக்கி சோதனை மேற்கொள்ளப்படும் என்றும், அதில் தேர்வாகும் மாடல்களுக்கு மட்டுமே பாதுகாப்புக்கான நற்சான்று வழங்கப்படும் என்று அரசு கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்தது நினைவுகூறத்தக்கது. சொகுசு வசதிகளுக்கும், சிறப்பம்சங்களுக்கும் கார் நிறுவனங்கள் தரும் முக்கியத்துவத்தை பாதுகாப்பு அம்சங்களுக்குத் தருவதில்லை என்பதுதான் உண்மை. இனிமேலாவது இந்த விஷயத்தில் அவர்கள் அக்கறை செலுத்த வேண்டும் என்பது நம்முடைய எதிர்பார்ப்பு..

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply