இந்த பழத்துடன் இதெல்லாம் சேர்த்து இனிமேல் சாப்பிடாதீங்க

Loading...

%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8dநாம் தினமும் சாப்பிட்டு வரும் உணவுகளில் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆரோக்கியமானது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
ஆரோக்கியம் தரும் இந்த பழங்களை வேறு சில பழங்களுடன் சேர்த்து சாப்பிடுவதால், அது மிகுந்த ஆபத்தை நமக்கு ஏற்படுத்தும்.

எனவே எந்த பழத்தை எதனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்துக் கொண்டு அந்த முறையை தவிர்க்க வேண்டும்.
இதனால் நமது உடலுக்கு நேரிட இருக்கும் தீங்குகளை முன்கூட்டியே நாம் தடுத்து விடலாம்.

வாழைப்பழம் மற்றும் புட்டிங்

வாழைப்பழத்துடன், புட்டிங்கை சேர்த்து சாப்பிடக் கூடாது. இதனால் வயிறு கனமாகி, நமது மனநிலையை மந்தப்படுத்தி, உடலில் டாக்ஸின்களின் உற்பத்தியை அதிகரித்து, பெரிய ஆபத்தை ஏற்படுத்துகிறது.

ஆரஞ்சு மற்றும் கேரட்

ஆரஞ்சு மற்றும் கேரட்டை ஒன்றாக சேர்த்து சாப்பிடக் கூடாது. ஏனெனில் இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதன் மூலம் அதிகமான அமிலச் சுரப்பு, நெஞ்செரிச்சல், சிறுநீரக பாதிப்புகள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

அன்னாசிப்பழம் மற்றும் பால்

அன்னாசி பழத்தில், புரோமிலைன் அதிகமாக உள்ளது. எனவே இதை பால் அல்லது தயிருடன் கலந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
ஏனெனில் இது நமது உடலுக்கு நஞ்சாகி குமட்டல், வாய்வுத் தொல்லை, தலைவலி, வயிற்று வலி போன்ற பல பிரச்சனைகளை உண்டாக்கும்.

கொய்யா மற்றும் வாழைப்பழம்

கொய்யாப்பழம் மற்றும் வாழைப்பழத்தை ஒன்றாக சேர்த்து சாப்பிடக் கூடாது.
ஏனெனில் இந்த பழங்களில், அசிடோசிஸ் அதிகமாக இருப்பதால், இது வயிறு உப்புசம், குமட்டல், தலைவலி மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

ஆரஞ்சு மற்றும் பால்

பால் குடிப்பதுடன் சேர்த்து ஆரஞ்சு ஜூஸையும் குடிக்க கூடாது. ஏனெனில் இது நமது உடலில் செரிமான பிரச்சனையை உண்டாக்குகிறது.

பப்பாளி மற்றும் எலுமிச்சை

பப்பாளி மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால், அது நமக்கு ரத்த சோகையை ஏற்படுத்தி, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின்களில் பல பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply