இந்த எண்ணெய்களைக் கொண்டு தினமும் மசாஜ் செய்தால் மார்பகங்கள் பெரிதாகும் என்பது தெரியுமா

Loading...

%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81பெண்களின் உடலமைப்பு அவர்களின் தோற்றத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஒரு பெண் அழகிய உடல் வடிவமைப்புடன் இருந்தால், அது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். பெண்களின் உடல் வடிவமைப்பு என்று வரும் வரும், அதில் மார்பகங்களும் அடங்கும். மார்பகங்கள் சரியான அளவில் இருந்தால், அதுவே அவர்களது தோற்றத்தை அழகாக வெளிக்காட்டும்.
ஆனால் நிறைய பெண்கள் சிறிய அளவிலான மார்பகங்களைக் கொண்டிருப்பதால், அதனைப் பெரிதாக்க பல வழிகளைத் தேடி முயற்சித்து வருகின்றனர். அதில் ஒரு வழி தான் ஆயில் மசாஜ். மார்பங்களுக்கு ஆயில் மசாஜ் செய்யும் போது, சரியான எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்தால், அதன் பலன் இன்னும் சிறப்பாக இருக்கும்.
இங்கு மார்பகங்களின் அளவைப் பெரிதாக்க உதவும் சக்தி வாய்ந்த எண்ணெய்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தினமும் இந்த எண்ணெய்களுள் ஒன்றைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால், நிச்சயம் மார்பகங்கள் பெரிதாகும்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய் மார்பங்களில் உள்ள செல்களின் வளர்ச்சியைத் தூண்டும். எனவே பாதாம் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதைக் கொண்டு தினமும் மசாஜ் செய்து வந்தால், விரைவில் மார்பகங்களின் அளவில் நல்ல மாற்றத்தைக் காணலாம். அதிலும் 10 வாரம் தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால், நிச்சயம் மார்பகங்கள் பெரிதாகி இருப்பதைக் காணலாம்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் கூட மார்பகங்களின் அளவைப் பெரிதாக்க உதவும். அதற்கு ஆலிவ் ஆயிலைக் கொண்டு தினமும் 10-15 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் மார்பகங்களில் இரத்த ஓட்டம் அதிகரித்து, அதன் அளவு அதிகரிக்க ஆரம்பிக்கும்.

சோயா எண்ணெய்

சோயா பீன்ஸைக் கொண்டு தயாரிக்கப்பட்ட எண்ணெயைக் கொண்டு மார்பகங்களை மசாஜ் செய்து வந்தால், அது ஈஸ்ட்ரோஜென் அளவை அதிகரித்து, மார்பகங்களின் அளவை அதிகரிக்கும். மேலும் ஆய்வுகளில் சோயா எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்வதுடன், தினமும் ஒரு கையளவு சோயா பீன்ஸை உட்கொண்டு வந்தால், மார்பகங்களின் அளவில் நல்ல மாற்றம் தெரிவதாக தெரிய வந்துள்ளது.

கிராம்பு எண்ணெய்

கிராம்பு எண்ணெயும் சிறிய மார்பகங்களைப் பெரிதாக்க உதவும். அதிலும் கிராம்பு எண்ணெயில் சற்று அதிகமாக இஞ்சி சாற்றினை சேர்த்து கலந்து, மார்பகங்களில் தடவி மசாஜ் செய்து வர, 8 வாரங்களில் மார்பகங்கள் நன்கு வளர்ச்சி பெற்றிருப்பதைக் காணலாம்.

வெந்தய எண்ணெய்

மார்பகங்களின் அளவை அதிகரிக்க உதவும் எண்ணெய்களுள் ஒன்று வெந்தய எண்ணெய். இந்த எண்ணெய் மார்பக பகுதியில் உள்ள சருமத்தை விரிவடைய உதவி, மார்பகங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். அதற்கு ஒரு முட்டையின் மஞ்சள் கருவுடன், 3 டேபிள் ஸ்பூன் வெந்தய எண்ணெய் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் மார்பகங்களில் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் 4 வாரங்களில் நல்ல பலன் கிடைக்கும்.

வெங்காய சாற்றினைக் கொண்டு எப்படி பெரிதாக்குவது?


தேவையான பொருட்கள்:

வெங்காய சாறு – 2 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு பௌலில் போட்டு நன்கு பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் முன் மார்பகங்களில் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.
* இந்த முறையை குறைந்தது 2 மாதம் பின்பற்றி வந்தால், நிச்சயம் மார்பகங்கள் பெரிதாகியிருப்பதைக் காணலாம்.

Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply