இந்தியாவில் ஸ்கோடா ஆக்டாவியா செடான் கார்களுக்கு ரீகால் அழைப்பு

Loading...

%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%ae%beஸ்கோடா இந்தியா நிறுவனம் தங்களின் ஆக்டாவியா செடான் கார்களுக்கு ரீகால் அழைப்பு விடுத்துள்ளது. சைல்ட் லாக் பழுது காரணமாக, இந்த ரீகால் அழைப்பானது, விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக, மொத்தம் 539 ஆக்டாவியா செடான்கள் திரும்ப அழைக்கப்படுகிறது. ஸ்கோடா இந்தியா நிறுவனம் அறிக்கைப்படி, ரீகால் செய்யப்படும் இந்த ஸ்கோடா ஆக்டாவியா செடான்கள், நவம்பர் 2015 முதல் ஏப்ரல் 2016 இடையிலான காலகட்டத்தில் தயாரிக்கபட்டவையாகும். ஸ்கோடா ஆக்டாவியா செடான் வாடிக்கையாளர்கள் அழைக்கபட்டு, அவர்கள் காரில் ரியர் டோர்களில் (பின் கதவுகளில்) உள்ள பழுதான சைல்ட் லாக், சோதனை செய்யபட்டு, மாற்றி தரப்படும். பழுதான சைல்ட் லாக்-கை சரி செய்ய வெறும் 12 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என ஸ்கோடா நிறுவனம் தெரிவிக்கிறது. தேவை ஏற்பட்டால், பழுதான சைல்ட் லாக் மாற்றபட்டு, புதிய சைல்ட் லாக் 45 நிமிடங்களில் பொருத்தி தரப்படும் என தெரவிக்கப்பட்டுள்ளது. இந்த பழுது சரி செய்யும் நடவடிக்கைகள் அனைத்தும் இலவசமாக செய்து தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கோடா டீலர்கள், இந்த பழுதான சைல்ட் லாக்கினால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு முறைப்படி அறிவிக்கும் என கூறப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply