இந்தியாவில் தடம் பதித்து 5 ஆண்டுகளை நிறைவு செய்த ஃபோர்டு அஷ்யூர்டு நிறுவனம்

Loading...

%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81உபயோகப்படுத்தப்பட்ட கார்களை விற்பனை செய்யும் அமெரிக்காவின் ஃபோர்டு அஷ்யூர்டு நிறுவனம், இந்தியாவில் கால் பதித்து வெற்றிகரமாக 5-ஆம் ஆண்டை நிறைவு செய்துள்ளது.
பொதுவாகவே, உபயோகப்படுத்தப்பட்ட கார்களை வாங்கும்போது நாம் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். கொஞ்சம் ஏமாந்தாலும், தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்.

அதனால் பெரும்பாலான யூஸ்டு கார் விற்பனை மையங்களை நம்ப இயலுவதில்லை. இந்த நிலையில்தான் உபயோகப்படு்த்தப்பட்ட கார்களை விற்பனை செய்யும் கார்ப்பரேட் நிறுவனமாக இந்தியாவில் தடம் பதித்தது ஃபோர்டு அஷ்யூர்டு.
வாடிக்கையாளர்களின் நம்பிக்கை, தரம், நியாயமான விலை, விற்பனைக்கு பிந்தையை சேவைகள் என பல விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்நிறுவனம் செயல்பட்டதால், படிப்படியாக வளர்ந்து தற்போது தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்துள்ளது.
அதன் வளர்ச்சி விகிதம் மூன்று இலக்கங்களை எட்டிப் பிடித்திருப்பதே அதற்கு சாட்சியாக உள்ளது. அதுமட்டுமின்றி இந்தியா முழுவதும் 185 விற்பனை மையங்களைக் கொண்டுள்ள ஃபோர்டு அஷ்யூர்டு நிறுவனம், வாடிக்கையாளர்கள் அளித்து வரும் வரவேற்பைப் பார்த்து புதிய அவுட் லெட்களைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளது.
பழைய கார்களை வாங்கும்போது அதன் தரம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டாமா? அதற்காக, நாடு முழுவதும் 169 தரப் பரிசோதனை மையங்களையும் இந்நிறுவனம் அமைத்துள்ளது. இங்கு அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் காரை ஆய்வு செய்து அதன் தரத்தை மதிப்பிட்டு வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிப்பார்கள்.
கார் இன்ஷுரன்ஸ், நிதியுதவி உள்ளிட்டவற்றையும் ஃபோர்டு அஷ்யூர்டு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
இந்நிறுவனத்தில் விற்பனை செய்யப்படும் காரை ஒருவர் வாங்கியவுடன், அவரது பெயருக்கு உடனடியாக ஆர்.சி.புத்தகம் மாற்றப்படுகிறது. இதன் மூலம் தேவையற்ற பிரச்னைகள் தவிர்க்கப்படுகின்றன.
உபயோகப்படுத்தப்பட்ட கார்கள் மெருகேற்றம் செய்யப்படுவதுடன், ஓராண்டு அல்லது 20,000 கிலோ மீட்டருக்கான வாரண்டியையும் வழங்குகிறது ஃபோர்டு அஷ்யூர்டு நிறுவனம்.
ஃபோர்டு கார்கள் மட்டுமில்லாமல், பிற நிறுவனங்களின் கார்களுக்கும் இத்தகைய வாரண்டி வழங்கப்பட்டு வருகிறது. கார்களுக்குத் தேவையான அசல் உதிரி பாகங்களை விற்பனை செய்வதற்கான அங்கீகரிப்பட்ட விற்பனையாளர்களை தமிழகம், கர்நாடகம், கேரளம், தில்லி, தெலங்கானா, ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஃபோட்டு அஷ்யூர்டு நிறுவனம் நியமித்துள்ளது.
மேன்மேலும் பல புதிய வளர்ச்சியை எட்டிப் பிடிக்க ஃபோர்டு அஷ்யூர்டு நிறுவனத்து டிரைவ் ஸ்பார்க்கின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply