இதையெல்லாம் அடக்காதீங்க

Loading...

%e0%ae%87%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95நமது உடலில் சாதாரணமாக சில செயல்கள் உண்டாகும் இவை இயற்கையானவை . பலர் மற்றவர்கள் இருக்கிறார்கள் என்று இதை அடக்க நினைப்பார்கள்.

இவற்றை மருத்துவ மொழியில் வேகங்கள் என்று அழைப்பர். சாதாரணமாக தோன்றும் நிகழ்வுகளை அடக்க அல்லது தடுக்க கூடாது. அப்படி அடக்கினால் நமது உடல் நோய்வாய் படும்போழுது அதிகம் பாதிக்கப்படும் .


இந்த வேகங்களின் வகைகள் :-

வாதம் (அபான வாயு)
தும்மல்
சிறுநீர்
மலம்
கொட்டாவி
பசி
நீர் வேட்கை (தாகம் )
இருமல்
இளைப்பு (மூச்சு வாங்குதல் )
தூக்கம்
வாந்தி
கண்ணீர்
சுக்கிலம்
சுவாசம் (மூச்சு )
இவைகள் சாதாரணமாக உடலில் தோன்றும் வேகங்கள் ஆகும். இவற்றை தடுத்தாலோ அல்லது அடக்கினாலோ உண்டாகும் நோய்கள் உண்டாகும்.


வாதம் (வாயு )

சாதாரணமாக இது இயல்பாக பிரிய வேண்டும்.இதனை அடக்கினால் மார்பு நோய் ,வாயு குன்மம், குடல் வாதம், உடல் குத்தல் ,குடைச்சல் மலக்கட்டு,நீர்க்கட்டு ,செரிமானக் குறைவு போன்றவை உண்டாகும். அதனால் வாயுவை அடைக்காதீர்கள் .


தும்மல்

அட தும்மல் என்ன நம்மளை கேட்டுட்டா வருது ,அது வந்தா தும்மிடுங்க . அடுத்தவங்க என்ன நினைப்பாங்க என்று அதனை அடக்காதீங்க. அவர்களிடமிருந்து சிறிது தள்ளி பொய் தும்மிடுங்க. இதனை அடக்கினால் தலை முழுதும் நோவும்,அனைத்து புலன்களும் (மெய்,வாய்,கண்,காது,மூக்கு) தெறித்து விடுவது போல் தோன்றும். முகம் இழுத்துக் கொள்ளும் .அதனால தும்மல் வந்தால் தும்மிடுங்க ,அடக்காதீங்க .


சிறுநீர்

அட இதனையும் அடக்காதீங்க ,இடம் இல்லை என்றோ நேரம் இல்லை என்றோ, சங்கோஜப் பட்டோ இதனை அடக்கி வைக்காதீங்க .மீறி அடக்கினா நீரடைப்பு,நீரிறங்கும் துளை புன்னாதல் ,ஆண்குறியில் குத்தல்,கல் உருவாகுதல்,அபான வாயு வயிற்றில் உருவாகுதல் ,நீர் எரிச்சல் போன்றவை உருவாகும்.


மலம்

இதனையும் அடக்காதீர்கள் .மலத்தை அடக்கினால் அபானம் பெருகி,அடக்கப்பட்ட மலம் தள்ளும்.கிருமிகள் பெருங்குடலில் சேரும்.தலைவலி உருவாகும். முழங்கால் கீழ் வலி ஒலியுடன் காற்று பிரிதல் உடல் வன்மை குறைவு ஆகியவை தோன்றும்.


கொட்டாவி

கொட்டாவி ஒரு கெட்ட ஆவின்னு அதை அடக்காதீங்க. அடக்கினால் முகம் வதங்கல்,அளவோடு சாப்பிட்டாலும் செரிக்காது. நீர் நோய்,வெள்ளை நோய்,அறிவு மயங்கல் போன்றவை ஏற்படும்.


பசி

பசி வந்தால் புசி,மாறி அதனை அடக்காதே. அடக்கினால் அதன் விளைவாக நீர் வேட்கை ,உடலும்,உடலின் பல்வேறு உறுப்புகளும் தத்தம் தொழில்களை சரிவர செய்யாமை ,உடல் இளைப்பு,பிரம்மை, முகவாட்டம் போன்றவைகள் தோன்றும். பட்டினி கிடந்தால் அல்சர் தோன்றும்.அல்சரின் கொடுமை தெரியுமல்லவா ?


இருமல்

இருமல் சளி பிடித்தால் வரும்.வறட்டு இருமல் ,சளி இருமல் என்ற வகைகள் உண்டு . இந்த இருமல் தீர மருந்து எடுத்துக் கொள்ளுங்கள் . ஆனால் இருமலை அடக்காதீர்கள்.மற்றவர்களிடம் கவுரவம் பார்த்து தம்மை நோயாளி என்று நினைத்து விடுவாரோ என நினைத்து இருமலை அடக்கினால் …..வருவது மிக்க இருமல் ,மூச்சு விடும்பொழுது அம்மூச்சில் கெட்ட நாற்றம் வீசுதல் ,இருதய நோய் உண்டாதல் ,ஆகியவை தோன்றும்.


இளைப்பு

இளைப்பு வாங்குதல் உங்களுக்கு தெரியும் .அதனை அடக்கினால் நீர் மேகம் பெருகும்,குன்மம் ,மூர்ச்சை ,குளிர் ஆகியவை தோன்றும்.


தூக்கம்

யாராக இருந்தாலும் தூக்கம் அவர்களுக்கு அவசியம். உழைக்கும் உடலுக்கு கொஞ்சம் ஒய்வு தேவை. தூங்கினால் உடல் புத்துணர்ச்சி அடையும்.தூங்காமல் இருந்தால் உடல் படும் அவஸ்தை .. நாள் முழுதும் தலைக்கனம்,கண்கள் சிவத்தல்,செவிடு, அரைப்பேச்சு ஆகியவை தோன்றும். டென்சன் ,எடுக்கும் தீர்மானத்தில் தெளிவின்மை ,களைப்பு ஆகியவை தோன்றும்.


வாந்தி

தோலில் தடிப்புகள் உண்டாதல் ,உடலில் நஞ்சு சேரல், பாண்டு (வெளுப்பு நோய்),கண்நோய்கள்,இரைப்பு,காய்ச்சல்,இருமல்,ஆகியன தோன்றும்.


கண்ணீர்

கண்ணீரையும் அடக்காதே ,சில சமயம் கண்ணீர் மனதின் பாரத்தை குறைக்கும் .கண்கள் சுத்தம் அடையும் . கண்ணீரை அடக்கினால் வரும் அவஸ்தை ……. கண் நோய் ,தலையில் புண்,வயிற்று வலி ஆகியவை வரும்.


சுக்கிலம்

சுக்கிலத்தை (விந்து) அடக்கினால் வருவது…சுரம்,நீர்க்கட்டு,கைகால்கள் மற்றும் கீல்கள் நோதல்,விந்து கசிதல் மாற்படைப்பு,மார்பு துடிப்பு ,வெள்ளை இவைகள் உண்டாகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply