இடுப்பு சதையை குறைக்கும் வாக்கிங்

Loading...

%e0%ae%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8dவாரத்தில் குறைந்தது ஒரு மணி நேரம் விறுவிறுப்பாக வாக்கிங் செய்தால், அது ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் தாக்கும் அபாயத்தை 35 சதவீதம் குறைக்கிறது. சர்க்கரை நோய் வரும் அபாயத்தை 50 சதவீதம் குறைக்கிறது. சிலவகை புற்றுநோய்கள் வரும் அபாயத்தை 20 முதல் 50 சதவீதம் வரை குறைக்கிறது. உடல் எடையை குறைப்பதற்கும் வாக்கிங் உதவுகிறது.

20 நிமிடங்களில் 1500 மீட்டர் தூரம் நடந்தால்கூட சுமார் 100 கலோரி எரிக்கப்படுகிறது. வேறு எந்த உடற்பயிற்சியும் செய்ய வழியில்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும், உடல் நலனுக்காக ஏதாவது ஒன்றை செய்ய நினைப்பவர்களுக்கும் வாக்கிங் எளிமையான பயிற்சி. நம் உடல் தசைகளின் சுருங்கி விரியும் தன்மை இயல்பாக இருப்பதற்கு வாக்கிங் உதவுகிறது.
வாக்கிங் செய்யும்போதுதான் உடலில் எல்லா தசைகளும் ஒரே நேரத்தில் இறுக்கமாகின்றன. வாக்கிங் செல்லத் தொடங்கியதும் வலி ஏற்படுவது இதனால் தான். போகப்போக இந்த வலி குறைந்து தசைகள் எலாஸ்டிக் தன்மை பெறுகின்றன. இடுப்புக்கு கீழ் தேவையற்ற சதையைக் குறைத்து கச்சிதமான உடல்வாகு பெற நினைப்பவர்களுக்கு வாக்கிங்கைவிட சிறந்த உடற்பயிற்சி எதுவுமில்லை.
இதற்கு எவ்வளவு வேகம் முடியுமோ, அவ்வளவு வேகத்தில் நடக்க வேண்டும். ஒரு நாளில் 15 நிமிடமாவது விறுவிறுப்பான வாக்கிங் செய்பவர்களுக்கு ஆயுளில் மூன்று ஆண்டுகள் கூடுகிறது. முறையாக வாக்கிங் செய்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. அடிக்கடி ஜலதோஷம், ஜுரம் போன்ற பிரச்சினைகள் வருவதில்லை.
வாக்கிங் மூலம் மூட்டுவலித் தொல்லை 25 சதவீதம் குறைகிறது. முதுமைக்காலத்தில் ஆஸ்தியோபோரோசிஸ் எனப்படும் எலும்புச் சிதைவு நோய் தாக்குவதையும் இதன்மூலம் தவிர்க்கலாம். வாக்கிங் உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து இதம் தருகிறது. கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. சுவாசக் கோளாறு உள்ளவர்களுக்கு வாக்கிங்கைவிட சிறந்த பலன் தரும் மருந்து எதுவும் இல்லை.
எந்த உடற்பயிற்சியானாலும் சரி, உடலுக்கு ஏராளமான ஆக்சிஜனைத் தரும். கடற்கரை, பூங்கா, திறந்தவெளி, மொட்டைமாடி என எங்கு வாக்கிங் சென்றாலும் சுத்தமான காற்று அதிகம் கிடைப்பதால் நுரையீரல் சீராக இயங்க உதவுகிறது. ஆஸ்துமா தாக்கும் அபாயத்தையும் தவிர்க்கலாம். தவறாமல் வாக்கிங் செல்பவர்களுக்கு நினைவுத்திறன் கூடும்.
மூளையின் செயல்பாடு சுறுசுறுப்பாகும். இளம்வயதில் தவறாமல் வாக்கிங் செல்கிறவர்களுக்கு முதுமையில் உடல் உறுப்புகள் இயங்காமல் அவதிப்படும் பிரச்சினை வருவதில்லை. உடல் குறைபாடுகளும் வருவதில்லை. அதனால் வாக்கிங் செல்வது மிகவும் நல்லது.

Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply