ஆஸ்டன் மார்டினின் வி 12 வேன்டேஜ் எஸ் ஸ்பிட் ஃபயர் 80 கார் அறிமுகம்

Loading...

%e0%ae%86%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf-12-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டன் தயாரித்த சூப்பர் மெரைன் ஸ்பிட் ஃபயர் போர் விமானம் எதிரிப் படைகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியது. அந்த காலத்தின் நவீன ரக போர் விமானமான அது, போரின்போது பிரிட்டனுக்கு பெருமை தேடித் தந்ததும் கூட. அதனால், அந்நாட்டு மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் ஸ்பிட் ஃபயர் போர் விமானத்துக்கு உண்டு. போரில் அந்த விமானம் பயன்படுத்தப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் பிரிட்டனின் பிரம்மாண்ட கார் உற்பத்தி நிறுவனமான ஆஸ்டன் மார்ட்டின் புதிய லிமிடெட் எடிசன் கார் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. வி 12 வேன்டேஜ் எஸ் ஸ்பிட் ஃபயர் 80 என்று அந்த ஸ்போர்ட் காருக்குப் பெயரிடப்பட்டுள்ளது. சும்மா சொல்லக் கூடாது… பார்க்க படு கிளாஸாகக் காட்சியளிக்கும் அந்த காரை வாங்கினாலே நீங்கள் கவனிக்கத்தக்க மனிதராகி விடுவீர்கள். ஆமாங்க… மொத்தமாகவே வெறும் 8 கார்களை மட்டுமே வி 12 வேன்டேஜ் எஸ் ஸ்பிட் ஃபயர் 80 மாடலில் தயாரிக்க உள்ளதாம் ஆஸ்டன் மார்ட்டின் நிறுவனம். லண்டனின் உள்ள ஆஸ்டன் நிறுவன க்யூ டிவிசன் தொழிற்சாலையில் இந்தக் கார்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஆஸ்டன் ஷோ ரூமில் மட்டும்தான் வி 12 வேன்டேஜ் எஸ் ஸ்பிட் ஃபயர் 80 மாடல் கார் கிடைக்குமாம். இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.60 கோடியாகும். ஸ்பிட் ஃபயர் போர் விமானத்தின் நிறத்தைப் போலவே இந்த மாடலும் டக்ஸ்ஃபோர்டு கிரீன் (கரும்பச்சை) வண்ணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விமானத்தின் இறக்கைகளில் மஞ்சள் நிற அவுட்டர் லைன் கொடுக்கப்பட்டிருக்கும். அதுபோலவே, வி 12 வேன்டேஜ் எஸ் ஸ்பிட் ஃபயர் 80 மாடல் காரிலும் பக்கவாட்டிலும், முகப்பு கிரில்லுக்கு நடுவிலும் மஞ்சள் நிற அவுட்டர் லைன் தரப்பட்டுள்ளது. வெளிப்புற வடிவமைப்பு முழுவதும் பக்கா மாடர்னாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. இது பார்த்தவுடனேயே ஒரு மெஜஸ்டிக் லுக்கைத் தருகிறது. இந்த மாடலில் உள்ள பல சிறப்பம்சங்களை டக்ஸ்ஃபோர்டில் உள்ள ஏர்கிராஃப்ட் ரீ ஸ்ட்ரோஷன் அமைப்பு உருவாக்கியுள்ளது. முகப்பு விளக்குகள் மற்றும் பின்புற டெய்ல் லேம்புகள் ஆகியவையும் போர் விமான சாயலில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்டீரியரை எடுத்துக் கொண்டால், ரிச்சான தோற்றத்தை அது தருகிறது. இதைத் தவிர, இந்தக் காரை வாங்குபவர்களுக்கு ஃப்ளையிங் காகில்ஸ் எனப்படும் கூலர் கண்ணாடிகள், இர்வின் ஜாக்கெட் உள்ளிட்டவற்றைத் தரவும் ஆஸ்டன் மார்ட்டின் நிறுவனம் முன்வந்துள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply