ஆற்றல் மிக்க புதிய எஞ்சினை அறிமுகம் செய்த ஹார்லி டேவிட்சன்

Loading...

%e0%ae%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%8e%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bfஇந்திய இளைஞர்கள் தீராக் காதல் கொண்டுள்ள பைக்குகளில் ஒன்று ஹார்லி டேவிட்சன். இந்த மாடல் பைக்குகள் சாலைகளில் வந்தாலே, அவற்றை வைத்த கண் வாங்காமல் பார்ப்பதற்கு கூட்டம் கூடி விடும். அந்த அளவுக்கு ஸ்டைலிஷ் மற்றும் கிளாஸி லுக் உடைய பைக்குகள் அவை.
ஸ்ட்ரீட் 750, அயர்ன் 883, 1200 கஸ்டம், ஃபோர்டி எய்ட், ரோட்ஸ்டெர், ஃபேட் பாப், ஃபேட் பாய் என இந்தியாவில் அந்நிறுவனத்தின் பல மாடல்களுக்கு செம டிமாண்ட். அசத்தலான வடிவமைப்பும், உலகளாவிய பிராண்ட் நேமும் தான் அதன் அட்வாண்டேஜ்.
ஹார்லி டேவிட்சன் பைக்
ஹார்லி டேவிட்சன் நிறுவனம், புதிய மாடல் பைக்குகளை அறிமுகம் செய்யப் போகிறது என அறிவித்தாலே, அது ஆட்டோ மொபைல் உலகில் திருவிழா அறிவிப்புக்குச் சமம். அப்படி ஒரு வரவேற்பு அதற்கு இருக்கும். அதேபோல, பைக்குகளில் பல்வேறு புதுமைகளைப் புகுத்துவதிலும், நவீன டெக்னாலஜிகளை அறிமுகப்படுத்துவதிலும் எந்த நிறுவனத்துக்கும் ஹார்லி டேவிட்சன் சளைத்தது இல்லை.
அந்த வரிசையில் இப்போது புதிய தொழில்நுட்பத்திலான எஞ்சினை அறிமுகப்படுத்தியுள்ளது அந்நிறுவனம். குறிப்பிட்ட மாடல்களில் மட்டும் தற்போதைக்கு அந்த எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. வருங்காலங்களில் அனைத்து மாடல்களிலும் அதை எதிர்பார்க்கலாம். மில்வாக்கி – எய்ட் எனப்படும் அந்த எஞ்சினானது வழக்கமான எஞ்சின்களைக் காட்டிலும் அதிக ஆற்றல் கொண்டது.
புதிய எஞ்சின்
இதற்கு முன்பு பிக் ட்வின் கேம் எஞ்சின்கள் ஹார்லி டேவிட்சன் பைக்குகளில் பொருத்தப்பட்டு வந்தன. கடந்த 1999-ஆம் ஆண்டிலிருந்து அந்த எஞ்சின் திறனுடன்தான் அந்நிறுவனத்தின் பைக்குகள் மார்க்கெட்டுக்கு வந்தன. இந்நிலையில், 1,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், மோட்டார் சைக்கிள் ஆர்வலர்கள் ஆகியோரிடம் அண்மையில் சர்வே ஒன்றை எடுத்திருக்கிறது ஹார்லி டேவிட்சன் நிறுவனம். அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்திலான வாகனங்களையே தாங்கள் விரும்புவதாக பெரும்பாலானோர் தெரிவித்ததை அடுத்து, இந்த புதிய டெக்னாலஜியிலான எஞ்சின்களைக் களமிறக்கியுள்ளது அந்நிறுவனம்.
ஸ்ட்ரீட் கிளைட், ரோட் கிளைட், எலக்ட்ரா கிளைட், டிரை கிளைட், ரோட் கிங் ஆகிய மாடல்களில் தற்போது மில்வாக்கி – எய்ட் எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது 1,750 சிசி திறன் கொண்டவையாகும். பழைய எஞ்சினைக் காட்டிலும் 11 சதவீத கூடுதல் செயல்திறன் உடையது என்றும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனம், தனது பைக்குகளில் சாதாரணமாக வடிவமைப்பு மாற்றம் செய்தாலே ஹாட் டாபிக்காக மாறிவிடும். தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தினால் கேட்கவா வேண்டும்? ஆட்டோ மொபைல் உலகில் இப்போது இதுதான் சூடான விவாதம்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply