ஆப்பிள் நிறுவனத்தின் புதிய திட்டம்

Loading...

%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஐபோன்களுக்கு உலகளாவிய ரீதியில் பலத்த வரவேற்பு இருப்பது அறிந்ததே.
இதேவேளை ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவில் காணப்படுகின்ற போதிலும் அமெரிக்காவிற்கு வெளியே உள்ள சில நாடுகளில் வைத்தே ஐபோன்கள் இதுவரை காலமும் தயாரிக்கப்பட்டு வந்தன.
இதற்கு பிரதான காரணமாக உற்பத்தி செலவு குறைவாக இருக்கின்றமை கருதப்பட்டது.
ஆனால் எதிர்காலத்தில் அமெரிக்காவில் வைத்தே ஐபோன்களை வடிவமைக்க ஆப்பிள் நிறுவனம் எண்ணியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான சாதகத் தன்மைகளை அந் நிறுவனம் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எதிர்பார்ப்பிற்கு மாறாக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றிருந்தார்.
இவரின் நிலைப்பாடுகள் ஒன்றாக அமெரிக்காவின் உற்பத்தி திறனை அதிகரிப்பதாக இருந்தது.
அதிலும் ஐபோன் உற்பத்திகளை அமெரிக்காவில் வைத்தே மேற்கொள்ள வேண்டும் என்ற தொனியிலும் கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.
இதன் விளைவாகவே ஆப்பிள் நிறுவனம் மேற்கண்ட முடிவினை எடுத்துள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply