ஆன் லைனில் அதிகம் பேரால் கவனிக்கப்பட்ட ஹீரோ மோட்டோ கார்ப்

Loading...

%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b2%e0%af%88%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b2%e0%af%8dஇன்றைக்கு எல்லாமுமே ஆன் லைன் மயமாகிவிட்டது. கம்ப்யூட்டரில் இருந்து கறிவேப்பிலை வரை இணையதளம் வழியே வர்த்தகம் நடக்கிறது (இதன் காரணமாக நம்ம ஊர் சிறு வியாபாரிகள் கடையை மூடி விட்டு காசிக்குப் பரதேசம் போய்க் கொண்டிருப்பது தனிக் கதை). கரண்ட் பில், சொத்து வரி, குடிநீர் வரி, மொபைல் பில் என எல்லாமுமே ஆன் லைன் வாயிலாகவே செலுத்தும் நிலைக்கு வந்துவிட்டோம். அந்த அளவுக்கு இணையதளங்கள் நம் இல்லங்களை ஆக்கரமிக்கத் தொடங்கி விட்டன. இப்போது, புதிய தகவல் என்னவென்றால் ஆன் லைன் வாயிலாக அதிகம் பார்க்கப்பட்ட ஆட்டோ மொபைல் கம்பெனி எது? என்று அண்மையில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விடூலி என்ற நிறுவனம்தான் இந்த ஆய்வை மேற்கொண்டது. அதாவது, எந்த ஆட்டோ மொபைல் நிறுவனத்தின் விளம்பரங்கள், விடியோக்கள் அதிகமாக சமூக வலை தளங்களில் பார்க்கப்பட்டன என்பது தொடர்பான ஆய்வுதான் அது. அதில் கிட்டத்தட்ட 19 ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 13 கார் உற்பத்தி நிறுவனங்களும் அடங்கும். சர்வேயின் முடிவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம்தான். ஃபேஸ்புக், யூ – டியூப், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மொத்தமாக 13 லட்சம் பேர் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் விடியோக்களை பார்த்து ரசித்துள்ளனர். அதற்கு அடுத்த இடத்தை ஆடி இந்தியா நிறுவனம் பிடித்துள்ளது. சுமார் 5.4 லட்சம் பேர் ஆடி கார்களின் விடியோக்களைப் பார்வையிட்டுள்ளனர். அடுத்தபடியாக 4.17 லட்சம் பேரின் பார்வையில் சிக்கி மூன்றாவது இடத்துக்கு செவரோலெட் நிறுவனம் தேர்வாகியுள்ளது. மஹிந்திரா, பிஎம்டபிள்யூ நிறுவனங்கள் முறையே நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களைப் பிடித்துள்ளன. மஹிந்திரா நிறுவன விடியோக்களை 1.79 லட்சம் பேரும், பிஎம்டபிள்யூவின் விளம்பர விடியோக்களை 1.6 லட்சம் பேரும் பார்த்துள்ளனர். இந்த விடியோக்களைப் பார்க்க பார்வையாளர்கள் அதிகம் பயன்படுத்திய சமூக வலை தளமாக விளங்குவது யூ – டியூப். அதற்கு அடுத்தடுத்த இடங்களில் ஃபேஸ் புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவை உள்ளன. இந்த ஆண்டில் யூ – டியூப் வலைதளத்தில் மட்டும் சுமார் 4 லட்சம் மணி நேரத்துக்கு இந்தியர்கள் விளம்பரப் படங்களைப் பார்த்துள்ளனர் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்பெல்லாம், டி.வி.யில் விளம்பரம் போட்டால் சேனல் மாற்றுவோம்.., ஆனால், இன்று வலைதளங்களில் ஒரு விடியோவைப் பார்க்க வேண்டுமென்றால் சில விளம்பரங்களை நாம் கட்டாயம் பார்க்க வேண்டிய நிலை உள்ளது. டிவி விளம்பரங்களை வெறுத்த நாம் ஆன் – லைனில் அவற்றை ஆர்வத்துடன் பார்ப்பதுதான்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply