ஆண்களுக்கு ஏற்படும் சரும பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும்

Loading...

%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%81%e0%ae%aeபெண்களைப் போல் ஆண்களும் பல்வேறு சரும பிரச்சனைகளால் பாதிப்படைகின்றனர். ஆண்கள் சரும பிரச்சனைகளைச் சந்திப்பதற்கு முக்கிய காரணமே மோசமான சுகாதாரம் தான்.

சுகாதாரமின்றி இருப்பதால், ஆண்களின் சரும அழகைக் கெடுக்கும்படியான பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடுகிறது. ஆண்கள் சந்திக்கும் சரும பிரச்சனைகளும், அதற்கான தீர்வுகளையும் வழங்கியுள்ளோம்.எரிச்சல்:

ஷேவிங் செய்த பின், சில ஆண்களுக்குச் சருமத்தில் கடுமையான எரிச்சல் ஏற்படும். இப்படி எரிச்சல் ஏற்படுவதற்குக் காரணம், மொக்கையான பிளேடு அல்லது டிரை ஷேவிங் செய்திருப்பது தான்.

இதைத் தடுக்க, ஷேவிங் செய்யும் முன் சருமத்தை மென்மையாக்க வேண்டும். அதற்கு ஷேவிங் ஆயிலை முதலில் பயன்படுத்தி, பின் ஜெல் க்ரீம் பயன்படுத்தி ஷேவிங் செய்ய வேண்டும். இறுதியில் மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும். முக்கியமாகப் பயன்படுத்தும் ரேசர் புதியதாக இருக்க வேண்டும்.பொடுகுத் தொல்லை:

பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பொடுகுத் தொல்லையால் பாதிக்கப்படுகின்றார்கள். இதைத் தடுக்க ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து, அதைக் கொண்டு தலைமுடியை அலச வேண்டும். அதுமட்டுமின்றி மைல்டு ஷாம்பு பயன்படுத்துவது, ஈரமான முடியுடன் தலையணையில் படுப்பது போன்றவற்றை நிறுத்த வேண்டும்.முதுகில் பருக்கள்:

பெரும்பாலான ஆண்களின் முதுகில் பருக்கள் அதிகம் இருக்கும். இப்படி முதுகில் பருக்கள் அதிகம் வருவதற்கு, அதிகப்படியான டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியே காரணம் ஆகும். முதுகில் வரும் பருக்களைத் தடுக்க, ஆன்டி-பாக்டீரியல் மற்றும் சாலிசிலிக் அமிலம் நிறைந்த பாடி வாஷ் கொண்டு முதுகுப் பகுதியை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். மேலும் பஞ்சு உடைகளை மட்டும் எப்போதும் உடுத்த வேண்டும்.மஞ்சள் நிற பற்கள்:

காபி, சிகரெட் போன்றவற்றால் பற்கள் மஞ்சள் நிறத்தில் மாறுகின்றன. மஞ்சள் நிறப் பற்களைத் தவிர்க்க, சிகரெட் பழக்கத்தைக் கைவிடுவதோடு, பழங்கள் மற்றும் காய்கறிகளை பச்சையாக அதிகம் சாப்பிட வேண்டும். இதனால் மஞ்சள் பற்கள் தடுக்கப்படும்.தலைமுடி உதிர்வு:

பெண்களை விட ஆண்கள் தான் அதிகளவில் தலைமுடி உதிர்வால் அவதிப்படுகிறார்கள். அதோடு, நரைமுடியாலும் கஷ்டப்படுகின்றனர். இதற்குக் காரணம் அவர்களது தவறான தலைமுடி பராமரிப்பு, மன அழுத்தம் போன்றவை தான். இவற்றைத் தவிர்த்தால், தலைமுடி உதிர்வைத் தடுக்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply