ஆட்டோமேடிக் கியர் ஆப்ஷனுடன் வருகிறது மாருதி இக்னிஸ்

Loading...

%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8dஇந்திய கார் மார்க்கெட்டின் ராஜாவாக விளங்கி வரும் மாருதி நிறுவனம், தனது புதிய காம்பேக்ட் சியூவி ரக காரான இக்னிஸை விரைவில் களமிறக்கத் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டில் டோக்கியோ மோட்டார் ஷோவிலும், சில மாதங்களுக்கு முன்பு இந்திய ஆட்டோ எக்ஸ்போவிலும் மாருதி இக்னிஸ் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டபோதே, பரவலான வரவேற்பை அது பெற்றது. கிராஸ்ஓவர் யுடிலிட்டி வெஹிக்கில் எனப்படும் சியூவி ரக கார்களில் தற்போது மகிந்திரா கேயூவி 100 மாடல் மட்டுமே சந்தையில் உள்ளது. அந்த மாடல் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அதற்குப் போட்டியாக வரவுள்ளது மாருதி இக்னிஸ்.
ஏஎம்டி மாடல்
இரண்டின் விலையும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. இந்த நிலையில், கேயூவி 100 விற்பனையை முறியடித்து வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்க்க 5 கியர்கள் கொண்ட ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனுடன் இக்னிஸைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாம் மாருதி நிறுவனம்.
சிட்டிக்கு சிறந்தது…
இதன் மூலம், சியூவி ரக கார்களில் ஆட்டோமேடிக் கியரை விரும்பும் வாடிக்கையாளர்களைக் கவர முடியும் என நம்புகிறது மாருதி. மேலும், இந்தியாவில் ஆட்டோமேடிக் கியர் ஆப்ஷன்களைத் தேர்வு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் இந்த முடிவுக்கு காரணமாக இருக்க வாய்ப்புள்ளது.
எஞ்சின் ஆப்ஷன்கள்
1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், 1.3 லிட்டர் டீசல் எஞ்சினும் பொருத்தப்பட்டு இரு வகையில் இக்னிஸ் மாடல் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் எஞ்சினைப் பொருத்தவரை 83 பிஎச்பி (முறுக்கு விசை) மற்றும் 115 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்டது. டீசல் எஞ்சினில், 74 பிஎச்பி மற்றும் 190 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் உள்ளது. இந்த இரண்டு மாடல்களிலும் ஆட்டோமேடிக் கியர் ஆப்ஷன்கள் அறிமுகப்படுத்தப்படலாம் எனத் தெரிகிறது. பூட் ரூம் இதைத்தவிர, 258 லிட்டர் கொள்ளளவு வரையில் உடைமைகளை வைத்துச் செல்வதற்கான பூட் ஸ்பேஸ் வசதி இக்னிஸில் உள்ளது (பூட்ஸ்பேஸை 415 லிட்டர் கொள்ளளவு வரை அதிகரித்துக் கொள்ளும் வசதியும் உண்டு).
பாதுகாப்பு அம்சங்கள்
மேலும், ஏர்பேக், 4 பவர் விண்டோஸ், யுஎஸ்பி மற்றும் புளூடூத் இணைப்பு வசதி, உள்ளிட்டவையும் இக்னிஸில் உள்ளன. மைலேஜைப் பொருத்தவரை, பெட்ரோல் எஞ்சின் கார் லிட்டருக்கு 20 கிலோ மீட்டர் பயணிக்கும் என்றும், டீசல் எஞ்சின் கார் லிட்டருக்கு 25 கிலோ மீட்டர் பயணிக்கும் என்று மாருதி உத்தரவாதம் அளிக்கிறது.
எதிர்பார்க்கும் விலை
விலையை எடுத்துக் கொண்டால், ரூ.4.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சம் வரை மாருதி இக்னிஸ் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply