ஆட்டோமேடிக் கியருடன் ஹுண்டாய் க்ரெட்டா எஸ் பிளஸ் வேரியண்ட் அறிமுகம்

Loading...

%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b9%e0%af%81%e0%ae%a3போராட்டங்களின் பிரதிபலிப்பு மனித வாழ்க்கை. ஆனால், அந்த நிலை மாறிப் போய் இப்போது வசதிகளால் மட்டுமே சூழப்பட்ட வாழ்க்கை இருக்க வேண்டும் என்று பெரும்பாலானோர் விரும்புகின்றனர். திரும்பும் இடமெல்லாம் வாழ்வை சௌகரியமாக்கும் நிலை வேண்டும் என நினைக்கும் சமூகம் உருவாகி வருகிறது. கால ஓட்டத்தில் இதுபோன்ற மாற்றம் அவசியமும் கூட. ஆட்டோ மொபைல் துறையை எடுத்துக் கொண்டாலும் அப்படித்தான். பல லட்ச ரூபாய் கொடுத்து சொகுசு கார் வாங்கினால்தான் பெரும்பாலான வசதிகள் கிடைக்கும் என்ற நிலை போய், நடுத்தர ரக கார்களிலும், ஆரம்ப நிலை கார்களிலுமே அனைத்து வசதிகளும் வந்துவிட்டன. இது காலத்தின் நிர்பந்தம். இத்தகைய சூழலைப் புரிந்து கொண்டு பல நிறுவனங்கள் குறைந்த விலை கார்களிலும் வாடிக்கையாளர்கள் விரும்பும் அனைத்து வசதிகளையும் கொடுத்து வருகின்றன. அந்த வரிசையில் ஹுண்டாய் நிறுவனமும் இணைந்துள்ளது. கிரீட்டா எஸ் பிளஸ் மாடல் எஸ்யூவியில் ஆட்டோமேடிக் கியர் ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது அந்நிறுவனம். க்ரெட்டா எஸ்யூவி காரில் உயர் ரக மாடலில் மட்டுமே அந்த ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் டீசல் மாடலான எஸ் பிளஸ்ஸிலும் இந்த ஆட்டோமேட்டிக் கியர் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. பெருநகரங்களில் புதிய ஹுண்டாய் கிரீட்டா எஸ் பிளஸ் மாடல் விற்பனைக்கும் வந்துவிட்டது. இதற்கான முன் பதிவுகளும் (புக்கிங்) தொடங்கி விட்டன. சென்னையில் ரூ.13.76 லட்சத்துக்கும், பெங்களூரில் ரூ. 13.78 லட்சத்துக்கும், தில்லியில் ரூ.13.56 லட்சத்துக்கும், கொல்கத்தாவில் ரூ.13.99 லட்சத்துக்கும் ஹுண்டாய் கிரீட்டா எஸ் பிளஸ் மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. முன்பதிவு செய்யப்பட்டு இரு மாதங்களுக்குப் பிறகு டெலிவரி கொடுக்கப்படும் என்றும் ஹுண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. எஸ் பிளஸ் மாடலில் 1.6 லிட்டர் சிஆர்டிஐ 4 சிலிண்டர் எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. இது, 126 பிஎச்பி மற்றும் 256 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்டது. மொத்தம் 6 கியர்கள் ஆட்டோ மேடிக் கியர் ஆப்ஷனுடன் உள்ளன. லெதர் சீட், வாய்ஸ் கன்ட்ரோல் நேவிகேஷன், ஆண்டி பிரேக் லாக் சிஸ்டம் (ஏபிஎஸ்), தொடுதிரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஏர் பேக் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் ஹுண்டாய் கிரீட்டா எஸ் பிளஸ் மாடலில் உள்ளன. ரெனால்ட் டஸ்டருக்குப் போட்டியாக இந்த மாடல் களமிறங்கியுள்ளது. எஸ் பிளஸ் மாடலில் புதிதாகக் கொடுக்கப்பட்டுள்ள ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வசதி மக்கள் மத்தியில் ஹிட்டடிக்குமா என்பதை விரைவில் பார்ப்போம்…. அதுவரை இணைந்திருங்கள் டிரைவ்ஸ்பார்க்குடன்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply