ஆடி க்யூ2 மினி எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும்

Loading...

%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8d%e0%ae%af%e0%af%822-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d%e0%ae%af%e0%af%82%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0ஆடி நிறுவனம் தயாரிக்கும் புதிய ஆடி க்யூ2 மினி எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஜெர்மனியை சேர்ந்த ஆடி நிறுவநம் உலகின் முன்னோடி கார் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. ஆடி நிறுவனம், அவ்வப்போது புதிய புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், ஆடி நிறுவனம், இந்திய வாகன சந்தைகளில் ஆடி க்யூ2 மினி எஸ்யூவி என்ற புதிய மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. புதிய ஆடி க்யூ2 மினி எஸ்யூவி, ஆடி ஆர்வலர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் மாடல்களில் ஒன்றாக உள்ளது. புதிய ஆடி க்யூ2 மினி எஸ்யூவி தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

இஞ்ஜின்;
ஆடி இஞ்ஜினியர்கள் இந்த புதிய ஆடி க்யூ2 மினி எஸ்யூவியை புதிய இஞ்ஜின் தேர்வுகளுடன் அறிமுகம் செய்ய உள்ளனர். புதிய ஆடி க்யூ2 மினி எஸ்யூவி, ஆரம்ப கட்டத்தில், பெட்ரோல் இஞ்ஜினுடனேயே அறிமுகம் செய்யப்படும். இதன் டீசல் வேரியன்ட் பின்னர் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வகைப்படுத்தல்;
புதிய ஆடி க்யூ2 மினி எஸ்யூவி, ஏற்கனவே இந்திய வாகன சந்தைகளில் விற்பனையில் உள்ள க்யூ3 மாடலுக்கு கீழாக வகைப்படுத்தபட்டுள்ளது.
உற்பத்தி;
உற்பத்தி செலவுகளை கட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கில், ஆடி நிறுவனம், இந்த புதிய ஆடி க்யூ2 மினி எஸ்யூவியை இந்தியாவில் தயாரிக்குமா, இல்லையா என்பது குறித்து இதுவரை எந்த விதமான தெளிவான தகவல்களும் வெளியாகவில்லை.
பெட்ரோல்
இஞ்ஜின்;
ஆடி நிறுவனத்தின் ரேஞ்ச்சில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தப்பட உள்ளது. பெட்ரோல் வேரியன்ட் மற்றும் டீசல் வேரியன்ட்களுக்கு இடையில், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்து கொள்ளலாம். டெல்லியில், 2000 சிசி மற்றும் அதற்கும் கூடுதலான கொள்ளளவு கொண்ட டீசல் வாகனங்களின் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு, பின்பு விலக்கி கொள்ளப்பட்ட தடைகளின் காரணமாக, அனைத்து மாடல்களிலும் பெட்ரோல் வேரியன்ட் அறிமுகம் செய்யப்படுகிறது. செடான்கள் முதல் எஸ்யூவி-கள் வரை அனைத்து மாடல்களிலும் பெட்ரோல் வேரியன்ட் அறிமுகம் செய்யப்படுகிறது.

விற்பனை பாதிப்பு;
டெல்லி அரசு, 2.0 லிட்டர் அல்லது அதற்கும் கூடுதலான கொள்ளளவு கொண்ட வாகனங்களின் விற்பனைக்கு தடை விதித்திருந்தது. இதனால், டீசல் இஞ்ஜின்களை பிரதானமாக கொண்டு விற்கபட்டு வந்த ஆடி, மெர்சிடிஸ் உள்ளிட்ட பல்வேறு கார் நிறுவனங்களுடைய மாடல்களின் விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டது. இதற்கு தீர்வாகவே, அனைத்து மாடல்களிலும் பெட்ரோல் வேரியன்ட்களை அறிமுகம் செய்ய ஆடி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

வருங்கால திட்டம்;
இதற்கிடையில், ஆடி நிறுவனம், இந்திய வாகன சந்தைக்களுக்கு என புதிய ஹேட்ச்பேக்கையும் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த ஹேட்ச்பேக், அறிமுகம் செய்யப்படுவதற்கு கொஞ்ச காலம் ஆகும் என ஆடி நிறுவனம் உறுதி செய்துள்ளது.

அறிமுகம்;
ஆடி நிறுவனத்தின் புதிய ஆடி க்யூ2 மினி எஸ்யூவி, இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply