ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் சூப்பர்கார் பிராந்திய அளவில் மும்பையில் அறிமுகம்

Loading...

%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d8-%e0%ae%b5%e0%ae%bf10-%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் சூப்பர்கார், பிராந்திய அளவில் மும்பையில் அறிமுகம் செய்யபட்டது. ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.
ஆடி ஆர்8 வி10 ப்ளஸ்…
ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் சூப்பர் கார், ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் ஆடி நிறுவனம் தயாரித்து வழங்கும் சூப்பர் கார் ஆகும். இது முன்னதாக தேசிய அளவில், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபட்டது.
விராட் கோஹ்லி அறிமுகம் செய்த ஆர்8…
ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் சூப்பர்காரை இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் பாலிவுட் நட்சத்திரம் ஆலியா பட் ஆகியோர் அறிமுகம் செய்தனர்.
இஞ்ஜின்;
இஞ்ஜின் கொள்ளளவு – 5.2 லிட்டர் இஞ்ஜின் வகை – வி10 பவர் – 8,250 ஆர்பிஎம்களில் 602 பிஹெச்பி டார்க் – 6,500 ஆர்பிஎம்களில் 560 என்எம்
டிரான்ஸ்மிஷன்;
ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் சூப்பர்கார், குவாட்ரோ ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் மூலமாக தான் 4 சக்கரங்களுக்கு பவர் செலுத்தபடுகிறது. இது 7-ஸ்பீட் எஸ்-ட்ரானிக் ட்யூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் மூலமாக தான் இஞ்ஜினுடன் இணைக்கபட்டுள்ளது.
உச்சபட்ச வேகம்;
ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் சூப்பர்கார், அதிகபட்சமாக மணிக்கு 330 கிலோமீட்டர் என்ற வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.
திறன்;
ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் சூப்பர்கார், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 3.2 நொடிகளில் எட்டிவிடும்.
ஸ்டைலிங்;
ஆ8 மாடலை காட்டிலும், ஆர்8 வி10 ப்ளஸ் சூப்பர்கார், ஆக்கிரோஷமான கிரில் மற்றும் ஏர் இண்டேக்களுடன் இதன் ஃப்ரண்ட் எண்ட் ரீ-ஸ்டைல் செய்யபட்டுள்ளது. ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் சூப்பர்கார், கூர்மையான ஆங்குலார் டிசைன் உடையதாக உள்ளது.
ஹெட்லேம்ப்கள்;
ஆடியின் லேசர் லைட் டெக்னாலஜியுடன் கூடிய எல்ஈடி ஹெட்லேம்ப்கள், இந்த ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் சூப்பர்காருக்கு கூடுதல் கூர்மையான தோற்றத்தை அளிக்கிறது.
சைட் தோற்றம்;
ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் சூப்பர்காரின் பக்கவாட்டில் உள்ள ஏர் இண்டேக்கள், இதன் இஞ்ஜினுக்கு அதிகமான காற்றை செலுத்துகிறது.
ரியர் தோற்றம்;
ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் சூப்பர்காரின் ரியரில் உள்ள பிக்ஸ்ட் ஸ்பாய்ளர், டிஃப்யூஸர் மற்றும் ஷார்ப் எல்ஈடி டெய்ல்லைட்களுக்கு அடியில் உள்ள ஏர் வெண்ட்கள், இதன் ஆக்கிரோஷமான தோற்றத்திற்கு கூடுதல வலு சேர்க்கிறது.
இண்டீரியர்;
ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் சூப்பர்காரின் இண்டீரியரில் பெரிய மாற்றங்கள் செய்யபட்டுள்ளது. இதன் இண்டீரியரில் ஆடியின் அற்புதமான 12.3 ஆடி விர்சுவல் காக்பிட் உள்ளது. இது ஸ்டியரிங் வீல் பகுதிக்கு பின்னால் உள்ள இடத்தை அடைத்து கொள்கிறது.
அடி இந்தியா தலைவர் கருத்து;
ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் சூப்பர்கார், மும்பையில் அறிமுகம் செய்யபடுவது குறித்து, ஆடி இந்தியாவின் தலைவர் ஜோ கிங் மிகுந்த பெருமிதத்தை வெளிப்படுத்தினார். “இதற்கு, முந்தைய மாடல், ஸ்போர்ட்டியான வேன்கார்ட் மாடலாக இருந்தது. இந்த ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் சூப்பர் காருக்கும் இதே அம்சங்கள் பொருந்தும். புதிதாக வடிவமைக்கப்பட்ட ஹை-பெர்ஃபார்மன்ஸ் ஸ்போர்ட்ஸ் கார், ஆன்-டிராக் மற்றும் ஆஃப்-டிராக் ஆகிய இரண்டிலுமே கூடுதல் வலுவான மாடலாக உள்ளது. உண்மையில், ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் சூப்பர்காரின் 50 சதவிகிதத்திற்கும் கூடுதலான கூறுகள், ஆடி ஆர்8 எல்எம்எஸ் மாடலில் இருந்து ஏற்கப்பட்டுள்ளது” என ஜோ கிங் தெரிவித்தார்.
போட்டி;
ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் சூப்பர்கார், நிஸ்ஸான் ஜிடி-ஆர், மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடிஎஸ் மற்றும் போர்ஷே 911 டர்போ ஆகிய கார்களுடன் போட்டி போட வேண்டிய நிலை உள்ளது.
விலை;
ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் சூப்பர்கார், மும்பையில் 2.55 கோடி ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் மும்பை விலையில் விற்கபடுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply