அஸ்டன் மார்ட்டின் கார் மைலேஜில் புதிய சாதனை

Loading...

%e0%ae%85%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aeகாராக இருந்தாலும் சரி, பைக்குகளாக இருந்தாலும் சரி…. நாம் முதலில் கேட்கும் விஷயம் மைலேஜ் எவ்வளவு கொடுக்கும்? என்பதுதான். லிட்டருக்கு எத்தனை கிலோ மீட்டர் செல்லும் என்பதைப் பொருத்துதான் நாம் வண்டியையே தேர்வு செய்கிறோம். அதிலும் குறிப்பாக கார் வாங்கும்போது மைலேஜ் விஷயங்கள்தான் எந்த மாடலைத் தேர்ந்தெடுப்பது என்பதை முடிவு செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வழக்கமாக கார் உற்பத்தி நிறுவனங்கள் மைலேஜுக்கு அளிக்கும் உத்தரவாத அளவை விட நடைமுறையில் ஓரிரு கிலோ மீட்டர்கள் குறைவாகவே கிடைக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதற்கு ஆயிரம் காரணங்களை கார் நிறுவனங்கள் கூறுகின்றன. பெட்ரோல் – டீசலின் தரம், சாலையின் நிலை, போக்குவரத்து நெரிசல், முறையாக கையாளத் தெரியாமை போன்ற பல விஷயங்களால்தான் மைலேஜ் குறைகிறது என்று கூறப்படுகிறது. அதுவும் சரியாகத்தான் இருக்கும் என்று நாமும் ஒப்புக் கொள்கிறோம். ஆனால், உத்தரவாதம் அளித்த மைலேஜைக் காட்டிலும் அதிக கிலோ மீட்டர் பயணத்தை நமது கார் வழங்கினால் எப்படியிருக்கும்? சந்தோஷத்தில் திக்கு முக்காடிப் போய்விட மாட்டோமா… அப்படி ஒரு மைலேஜ் பரிசோதனையை சாலையில் நடத்தி எதிர்பார்த்ததை விட அதிக தூரத்துக்குப் பயணித்துள்ளது ஆஸ்டன் மார்ட்டின் கார். வழக்கமாக மைலேஜ் பரிசோதனைகள், ஐரோப்பிய மாசுக் கட்டுப்பாட்டு விதிகளுக்குட்பட்டு ஆய்வகங்களில் நடத்தப்படும். அதன்படி கணக்கிடப்பட்டு லிட்டருக்கு எத்தனை கிலோ மீட்டர் செல்லும் என்ற உத்தரவாதத்தை கார் நிறுவனங்கள் வழங்கும். ஆனால், ஆஸ்டன் மார்ட்டின் நிறுவனம், தனது வி – 8 மாடல் காரை சமீபத்தில் சாலையில் பயணித்து மைலேஜ் சோதனை மேற்கொண்டது. லிட்டருக்கு 9 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைக்கும் என்பது ஆய்வகக் கணக்கீட்டின்படி அளி்க்கப்பட்ட உத்தரவாதம். ஆனால், அதைக் காட்டிலும் கூடுதலான தூரம் பயணித்து புதிய மைலேஜ் சாதனையை எட்டியுள்ளது ஆஸ்டன் மார்ட்டின் வி – 8 கார். வேறு எந்த நிறுவனத்தின் கார்களும், உத்தரவாதம் அளித்த மைலேஜ் அளவைக் காட்டிலும் கூடுதலாகச் சென்று சாதனை படைத்ததில்லை. தற்போது ஆஸ்டன் மார்ட்டின் கார்கள் இதனை சாத்தியமாக்கியதால், போட்டி நிறுவனங்களும் சாலையில் புழுதி பறக்க மைலேஜ் சோதனைகளை விரைவில் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.

Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply