அழகை அதிகரிக்க தக்காளி ஜூசும் உபயோகப்படுகிறது

Loading...

%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%af%88-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%9cகுளிர்காலத்தில் சருமம் வறட்சியடைந்துவிடும். ஆகவே அந்த வறட்சியைப் போக்க மாய்ஸ்சுரைசர் அல்லது எண்ணெயை தடவினால், சருமம் அதிகப்படியான எண்ணெய் பசையுடன் காணப்படும்.

அதிலும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு என்றால், இது மோசமான தோற்றத்தைக் கொடுக்கும். எனவே எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் சருமத்தில் வறட்சி ஏற்படாமலும், அதிகப்படியான எண்ணெய் பசை இல்லாதவாறும் வைத்துக் கொள்ள, ஒருசில பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரிக்க வேண்டும். அப்படி எண்ணெய் பசை சருமத்தினருக்கு ஏற்ற ஒரு சரும பராமரிப்பு பொருள் தான் தக்காளி.

இந்த தக்காளியைக் கொண்டு சருமத்தை பராமரித்தால், அது சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைப் போக்க வல்லது. அதுமட்டுமின்றி, சருமத்தின் இளமைத்தன்மையும் பாதுகாக்கப்பட்டு, நீண்ட நேரம் சருமமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். அதற்கு தக்காளியை அரைத்து சருமத்தில் தேய்தாலும் சரி, அல்லது அதன் ஒரு துண்டைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால் போதும். இப்போது தக்காளி கொண்டு சருமத்தைப் பராமரித்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போமா!!!


சரும துளைகளின் அளவை சுருங்கச் செய்யும்

சிலருக்கு சருமத் துளைகளானது பெரியதாக இருக்கும். அப்படி சருமத் துளைகளானது பெரியதாக இருந்தால், அழுக்குகள் மற்றும் தூசிகள் தங்கி சரும அழகைக் கெடுக்கும். எனவே தக்காளியை எலுமிச்சை சாற்றுடன் கலந்து, முகத்தை துடைத்து வந்தால், அது சருமத் துளைகளின் அளவைக் குறைக்கும்.


முகப்பருவை குறைக்கும்

பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பரு. இத்தகைய முகப்பருவை தக்காளி கொண்டு எளிதில் போக்கலாம். ஏனெனில் அதில் உள்ள அமிலங்கள், வைட்டமின்கள் முகப்பருவை தடுக்கும். அதற்கு தக்காளியை அரைத்து முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.


எண்ணெய் பசையை போக்கும்

சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை இருந்தால், அது அழகைக் கெடுக்கும். ஆகவே எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், தினமும் தக்காளியை எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து கலந்து முகத்தை மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.


சூரியக்கதிர்களால் ஏற்படும் பாதிப்பு

பொதுவாக கோடையில் தான் சருமம் அதிகப்படியாக சூரியக்கதிர்களால் பாதிக்கப்படும். ஆகவே அத்தகைய பாதிப்பை தடுக்க, தக்காளியைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால் குணமாகும்.


சரும நிற மாற்றம்

சருமத்தில் ஒரு பகுதி ஒரு நிறத்திலும், மற்றொரு பகுதி வேறு நிறத்திலும் இருந்தால், அது அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும். ஆகவே சருமத்தின் நிறத்தை ஒரே மாதிரி பராமரிக்க, தக்காளியைக் கொண்டு தினமும் மசாஜ் செய்யுங்கள்.


இயற்கை நிறமூட்டி

தக்காளியில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால், இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமத்தின் நிறம் அதிகரித்து வெளிப்படும்.


அழகான சருமம்

நல்ல அழகான மற்றும் மென்மையான சருமம் வேண்டுமானால், தக்காளி சாற்றில், சந்தன பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, சருமத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள சோர்வு நீங்கி, சருமம் அழகாகவும் புத்துணர்ச்சியுடனும் காணப்படும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply