அழகான சருமம் வேண்டுமா இந்த பழங்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போடுங்க

Loading...

%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%87%e0%ae%a8ஒவ்வொருவருக்குமே அழகான சருமம் வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காக எத்தனையோ வழிகளை முயற்சிப்போம். அதில் பெரும்பாலானோர் க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். இப்படி க்ரீம்களைப் பயன்படுத்தினால், அதனால் சரும செல்கள் தான் பாதிக்கப்படும். சரும செல்களின் ஆரோக்கியம் மேம்படவும், சருமம் அழகாக இருக்கவும் நாம் வாங்கி சாப்பிடும் ஒருசில பழங்களைக் கொண்டு முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால் போதும். இங்கு சருமத்தின் அழகை அதிகரிக்க உதவும் சில ஃபுரூட் ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.


வாழைப்பழம்

வாழைப்பழம் வறட்சியான சருமத்தினருக்கு ஏற்றது. அதற்கு வாழைப்பழத்தை மசித்து, சிறிது பால் மற்றும் தேன் சேர்த்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், சருமம் வறட்சியின்றி பொலிவோடும் அழகாகவும் இருக்கும்.


ஆரஞ்சு

ஆரஞ்சு பழம் எண்ணெய் பசை சருமத்தினருக்கு ஏற்றது. அதற்கு 2 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் உடன் 1 ஸ்பூன் சந்தனப் பொடி மற்றும் 1 டேபிள் ஸ்பூன் காலமைன் பவுடர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஓரளவு உலர்ந்த பின், முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் போட்டால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் அதிகரிக்கும்.


ஆப்பிள்

ஆப்பிள் நார்மல் சருமத்தினருக்கு ஏற்றது. அதற்கு ஆப்பிளை அரைத்து, அத்துடன் பால், பால் பவுடர் மற்றும் முல்தானி மெட்டி பொடி சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இதனால் சருமத்தின் மென்மைத்தன்மை அதிகரிப்பதோடு, பொலிவும் அதிகரிக்கும்.


ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி பழம் காம்பினேஷன் சருமத்தினருக்கு ஏற்றது. அதற்கு ஸ்ட்ராபெர்ரியுடன் புதினா சேர்த்து அரைத்து, அத்துடன் சிறிது தேன் கலந்து, சருமத்தில் தடவி உலர வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள கருமை நீங்கும், சரும செல்களின் ஆரோக்கியம் மேம்பட்டு சருமம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.


இளநீர்

இளநீர் சென்சிடிவ் சருமத்திற்கு ஏற்ற ஒன்று. 1 டேபிள் ஸ்பூன் இளநீரில் 1 டேபிள் ஸ்பூன் காலமைன் பவுடர் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5-7 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி ஒருநாள் விட்டு ஒருநாள் போட்டு வந்தால், சரும பொலிவு அதிகரிக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply