அரிசி பொரி உப்புமா

Loading...

%e0%ae%85%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%ae%beஇட்லி அரிசி – 1 கப்,
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 5,
பச்சைமிளகாய் – 2,
இஞ்சி – 1/2 இன்ச்,
காய்ந்தமிளகாய் – 2 (கிள்ளியது),
துருவிய தேங்காய் – 1/4 கப்,
உப்பு – தேவைக்கு,
தண்ணீர் – 2 1/2 கப்.
தாளிக்க…
கடுகு – 1 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 1 கொத்து,
எண்ணெய் – தேவைக்கு.


எப்படிச் செய்வது?

இட்லி அரிசியை வெறும் கடாயில் பொன்னிறமாகும் வரை வறுத்து, சற்று கொரகொரப்பாக பொடிக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பச்சைமிளகாய், இஞ்சி, காய்ந்தமிளகாய் சேர்த்து வதக்கி, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமானதும், தண்ணீர் ஊற்றி உப்பு சேர்க்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, பொடித்த அரிசியை சேர்த்துக் கிளறவும். பிறகு அடுப்பை 5 நிமிடம் சிம்மில் வைத்து மூடிவிட்டு, 2 நிமிடத்திற்கு ஒரு முறை திறந்து கிளறவும். பிறகு தேங்காய்த்துருவலை தூவி கிளறி பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply