அத்திப்பழ அல்வா

Loading...

%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b4-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%beஅத்திப்பழத் துண்டுகள், முந்திரி தலா 20, சர்க்கரை ஒரு கப், நெய் 6 டீஸ்பூன், பாதாம், பிஸ்தா தலா 10, ஏலக்காய்த்தூள் சிறிதளவு.


செய்முறை:

முந்திரி பருப்பு 10, அத்திப்பழத் துண்டுகள், பாதாம், பிஸ்தா ஆகியவற்றை ஒன்றாக ஊற வைத்துக் கொள்ளவும். பாதாம் பருப்பை தோல் உரித்து, எல்லாவற்றுடனும் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். கடாயில் நெய் விட்டு அரைத்த விழுதைப் போட்டு பத்து நிமிடம் கிளறவும். பிறகு, சர்க்கரை சேர்க்கவும். மீதமுள்ள முந்திரிப்பருப்பை உடைத்து, சிறிதளவு நெய்யில் வறுத்து சேர்க்கவும். ஏலக்காய்த்தூள் சேர்த்து, அல்வா பதத்தில் ஒட்டாமல் வந்ததும் கிளறி இறக்கவும். இந்த அல்வா இனிப்பாக சுவையுடன் இருப்பதுடன் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். அத்திப்பழம் இருமல் உள்ளிட்ட பிரச்னைகளைப் போக்கி உடலில் ரத்த அளவை அதிகரிக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply