அதிவேக சூப்பர் கணினியை தயாரிக்கும் ஜப்பான்

Loading...

%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%87%e0%ae%95-%e0%ae%9a%e0%af%82%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%a4உலகின் அதிவேக சூப்பர் கணினியை தயாரிக்கும் பணிகளை ஜப்பான் தொடங்கியுள்ளது.

வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில், சூப்பர் கணினி தயாரிப்பில் பல்வேறு நாடுகளும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளன.

அறிவியல் மற்றும் என்ஜீனியரிங் சார்ந்த கண்டுபிடிப்புகள், வளர்ச்சி மற்றும் சேவைப் பணிகளுக்குத் தேவையான தகவல்களை சேமித்து வைப்பதன் மூலமாக, ஒருநாட்டின் அறிவியல் சார்ந்த வளர்ச்சி, தகவல்தொழில்நுட்ப சேவைக்கு, சூப்பர் கணினி உதவுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும், சூப்பர் கணினி தயாரிப்பில் ஜப்பான் முன்னிலையில் இருந்தது.

ஆனால், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் தற்போது உலகின் அதிகவேக கணினி தயாரித்து, முன்னணிக்கு வந்துள்ளன.

இதன்படி, சன்வே தைஹூலைட் என்ற பெயரில், 93 பீட்டா ஃப்ளாப்ஸ் திறன் கொண்ட, சூப்பர் கணினியை நிறுவி, சீனா முதலிடத்தில் உள்ளது.

அதற்கடுத்த இடத்தில் அமெரிக்கா உள்ளது. ஜப்பான், 13.5 பீட்டா ஃப்ளாப்ஸ் திறன் கொண்ட சூப்பர் கணினியை நிறுவி, 3ம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், சூப்பர் கணினி சந்தையில் போட்டியில் முதலிடத்தை மீண்டும் பிடிக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது.

இதற்காக, 130 பீட்டா ஃப்ளாப்ஸ் திறன் உள்ள சூப்பர் கணினியை தயாரிக்கும் பணிகளை தொடங்கியுள்ளது. 2017-ம் ஆண்டில் இருந்து இது செயல்பட தொடங்கும் என, ஜப்பான் கூறியுள்ளது.

இதன்மூலமாக, சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சேவையில் ஜப்பான் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply